பொழுதுபோக்கு

கர்ப்பிணியாக இருக்கும் தீபிகாவின் புதிய வீடியோ வெளியானது…

நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

இதையடுத்து, பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் சில பொருட்களை பதிவு செய்து நடுவில் ‘செப்டம்பர் 2024’ என்று குறிப்பிட்டு தீபிகா – ரன்வீர் என்றும் இருந்தார்.

இதனை அடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.

திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர் கர்ப்பமாக இருப்பதற்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பின், வெளியில் தலைகாட்டாமல் இருந்த, தீபிகா, மகாராஷ்டிராவில் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தனது கணவர் ரன்வீர் சிங்குடன் வந்திருந்தார்.

கணவன் மனைவி இருவருமே வெள்ளை நிறத்தில் சட்டையும், க்ரே நிறத்தில் பேண்டும், கூலிங் கிளாசும் அணிந்து வந்திருந்தனர். கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை காரில் பாதுகாப்பாக கை தாங்கலாக அழைத்து சென்றார் ரன்வீர்.

நடிகை தீபிகா படுகோனே முதன் முதலாக தனது பேபி பம்பைக் காட்டி, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து சிரித்தபடி சென்றார். அங்கிருந்த பலரும் தீபிகாவிற்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.

இதேவேளை, அண்மையில் தீபிகா பொது வெளியில் மஞ்சள் நிற உடையுடன், கர்ப்பிணிப் பெண்ணாக வலம்வருகின்ற வீடியோ வெளியாகி உள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்