உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார்.

“லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து மீட்சிக்குத் தனது நாடு நகரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!