இலங்கை

21 மாவட்டங்களில் உச்சம் தொடும் வெப்பம்!

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ( 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பச் சுட்டெண் (Heat Index) அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும்.

அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு (Heat Cramps) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!