போர்நிறுத்தத்தை வரவேற்ற லெபனான் – சர்வதேச முயற்சிகளுக்கு பாராட்டு
இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் வரவேற்றுள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்தே இந்த ஒப்பந்தத்தை லெபனான் தொடர்ந்து கோரி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த போர் நிறுத்தம் மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப உதவும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகளையும் நவாஃப் சலாம் பாராட்டியுள்ளார்.




