இலங்கை செய்தி

இலங்கையில் இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

இந்த நாட்டில் இயக்கப்படும் 90 வீதமான வாகனங்கள் தரமற்ற புகை மாசுவைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உமிழ்வு சோதனைக்கு சமர்ப்பிக்கப்படும் வாகனங்களில் 20 சதவீதம் தோல்வி அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இயக்கப்படும் 90 வீதமான வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதாக மேலும் தெரியவந்துள்ளது.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு, பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இறக்குமதி மற்றும் வாகன மாசுபாடு தொடர்பான கண்காணிப்பு, சோதனை மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் அடங்கிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தபட்ச தரத்தை தயாரிப்பதற்கான யோசனையை போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்துள்ளது.

இலங்கைக்கு பயணிகள் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான குறைந்தபட்ச தரநிலையை தயாரிப்பதற்காக இந்த குழு கூட்டம் கூட்டப்பட்டது.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர், இலங்கைக்கு பயணிகள் பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு அமைய பேருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டும் என மேலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content