வடமேற்கு நைஜீரியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 6 பேர் மரணம்
6 killed in terrorist attack in northwestern Nigeria
வடமேற்கு நைஜீரியாவில்(Nigeria) தீவிரவாதிகள் தாக்கியதில் ஐந்து வீரர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்ஃபாரா(Zamfara) மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கச் சென்ற வீரர்கள் மீது இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், எந்தக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது என்பது தெரியவில்லை என்றும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





