இலங்கை

இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து 29 தொலைபேசிகள் மீட்பு!

இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் சிலர் தங்கியுள்ள பூசா  உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி வார்டுகளில் இருந்து 29 கையடக்க தொலைபேசிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட தொலைபேசிகள் பிரபல மற்றும் உயர்மட்ட குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான தெமட்டகொட சமிந்தவின் அறையில் ஒரு தொலைபேசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வேல சுதா’ மற்றும் மற்றொரு  பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிடிகம ருவான்’ ஆகியோரின் அறைகளிலும் தொபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்