இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கியுள்ளனரா FBI குழுவினர்?

  • May 24, 2026
  • 0 Comments

விசாரணையின் நிமித்தம் FBI சிறப்புக் குழுவினர் எவரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக FBI அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில், “ பல நாடுகளில் உள்ள வழக்கமான […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ள ‘சிறு கட்சி’!

  • May 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தற்போதைய சூழலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால், வலதுசாரி கொள்கையுடைய பாலின் ஹான்சனின் One Nation கட்சி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என புதிய கருத்துக்கணிப்பு   மூலம் தெரியவந்துள்ளது. பாரம்பரிய எதிர்க்கட்சிக் கூட்டணியான லிபரல் மற்றும் நேஷனல் கட்சிகள்  முழுமையாகத் துடைத்தெறியப்படும் துடைத்தெறியப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ரெட்பிரிட்ஜ் குரூப் மற்றும் ஆக்சென்ட் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் […]

செய்தி விளையாட்டு

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் இன்று களத்தில்!

  • May 24, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 69 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஆரம்பமாகும். IPL தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி (நிகர ரன் விகிதம் 0.783), முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் (0.695 ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (0.524) ஆகிய அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களை […]

உலகம்

வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!! ஒருவர் பலி!

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே  நேற்று பிற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், வளாகத்தின் பாதுகாப்பை  அதிகரிக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும்  இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் […]

செய்தி விளையாட்டு

அபார வெற்றியுடன் play-off வாய்ப்பில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்!

  • May 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 197 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ஸ்ரேயஸ் […]

இலங்கை

மோசமான வானிலை – 28000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலையால் 28,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 நபர்கள் இந்தத்  மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கம்பஹா மாவட்டத்தில்தான் அதிகபட்ச நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. மேலும், புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 நபர்கள், கொழும்பு மாவட்டத்தில் […]

இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 நபர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பு வெளியீடு!

  • May 23, 2026
  • 0 Comments

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும்  பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 226 நபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார். அவர்களில் ஏறக்குறைய 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 35 சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் […]

செய்தி

அமைதி முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு!

  • May 23, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார். மேற்கு ஆசிய போர் நிலைவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை இந்திய […]

உலகம்

நியூயார்க்கில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிப்பு சம்பவம் பதிவு!! 34 பேர் காயம்!

  • May 23, 2026
  • 0 Comments

நியூயார்க் நகர கப்பல் கட்டும் தளத்தில் நேற்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை  கட்டுப்படுத்தியுள்ளனர். நியூயார்க் தீயணைப்புத் துறை (FDNY), அபாயகரமான பொருட்கள் பிரிவு (Hazmat), மற்றும் நியூயார்க் நகர காவல்துறை (NYPD) உள்ளிட்ட பல்வேறு முகமைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதன்மை மீட்புப் பணியாளர்கள் களப்பணியாற்றியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நியூயார்க் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரான்சுக்குள் நுழைய இஸ்ரேல் அமைச்சருக்கு தடை!

  • May 23, 2026
  • 0 Comments

சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சர் Itamar Ben-Gvir பிரான்சுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வலர்களைக் கட்டிப்போட்டு ,அவர்கள் வதைக்குட்படுத்தப்படும் காணொளியை இவர் வெளியிட்டிருந்தார். இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சும் கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளது. இந்தச் செயல் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இத்தகைய வன்முறையைத் தூண்டும் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்றும் […]