இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 நபர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பு வெளியீடு!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும்  பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 226 நபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார்.

அவர்களில் ஏறக்குறைய 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 35 சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 33 பிற குற்றவாளிகளும், ஏறக்குறைய 68 முதல் 70 சந்தேக நபர்களும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 226 பேருக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!