உலகம் செய்தி

இஸ்லாமாபாத் அமைதி பேச்சு தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவானது தனது வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலை விட சொந்த நாட்டு நலன்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதி பேச்சின் வெற்றி, அமெரிக்காவின் முடிவிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலவேளை அமெரிக்கா இஸ்ரேலின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும். அவ்வாறு நடந்தால் ஈரான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெப்போதையும் விட தீவிரப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவிற்கு எதிராக திரும்பும் ஸ்டாமரின் வாக்குறுதி!

  • April 11, 2026
  • 0 Comments

ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் ரஷ்யாவின் நிழல் கப்பல்களை பிரித்தானியா கைப்பற்றினால், அக்கப்பலில் பணிப்புரிபவர்கள் தஞ்சம் கோர வாய்ப்புள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கடல் பகுதியில் எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றுவது, ரஷ்ய கூலிப்படையினர் குடியேற்ற விதிகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று உள்துறை மற்றும் வெளியுறவுச் செயலாளர்கள் இருவரும் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறித்த கால்வாயில் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிழல் கப்பல்களை கைப்பற்றுவதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் சில நாட்களுக்கு முன்பு உறுதியளித்தார். இருப்பினும் அத்தகைய நடவடிக்கை “சர்வதேச […]

உலகம் செய்தி

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குகிறது சீனா?

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு சீனா தயாராகிவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஆயுத பரிமாற்றத்தில் தாம் பங்கேற்கவில்லை என்ற விம்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நட்பு நாடுகள் ஊடாக அவற்றை கையளிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இக்காலப்பகுதியை பயன்படுத்தி தனது ஆயுத இருப்பைப் புதுப்பித்துக் கொள்ள ஈரான் முனையக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், […]

இலங்கை

பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து விளக்கம்!

  • April 11, 2026
  • 0 Comments

நாட்டில் வரும் ஜூன் மாத இறுதி வரை பெட்ரோல் 92 மற்றும் 95-க்கு பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண உறுதிப்படுத்தினார். ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் வந்து சேரும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், உறுதிப்படுத்தப்பட்ட சரக்குகளின் அடிப்படையில், மே மாத இறுதி வரை போதுமான டீசல் விநியோகம் இருக்கும் என்று மேலும் கூறினார். இதற்கிடையில், மின்சார […]

இந்தியா தமிழ்நாடு

‘ஜனநாயகன்’ வெளியானது அரசியல் சதி!

  • April 11, 2026
  • 0 Comments

‘ஜனநாயகன்’ படத்தை இரகிசயாக வெளியிட வைத்து வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என தமிழக பா.ஜ.க. விமர்சித்துள்ளது. படம் வெளியானமை தொடர்பில் சி.பி.ஐ. விசாரணை கோர விஜய் தயாரா என சவாலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாவுக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி அனுதாப […]

இலங்கை

போக்குவரத்து விதிமீறல்களை அறிவிக்க விசேட WhatsApp இலக்கம்!

  • April 11, 2026
  • 0 Comments

புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக 070 4755600 என்ற விசேட வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தென்படும் போக்குவரத்து விதிமீறல்களை காணெளியாக பதிவு செய்து இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். புத்தாண்டு […]

இலங்கை செய்தி

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.ஐ.டியில் முறைப்பாடு!

  • April 11, 2026
  • 0 Comments

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CID இன்று (11) முற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது. நிலக்கரி மோசடி தொடர்பிலேயே எரிசக்தி அமைச்சருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல்!

  • April 11, 2026
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தக் காலப்பகுதியில் ஒற்றை, இரட்டை நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் களமிறங்கியது அமெரிக்க தூதுக்குழு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமைதி பேச்சுக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். துணை ஜனாதிபதி JD Vance தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவினரை, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். பாகிஸ்தான் ராணுவ தளபதியும் விமான நிலையம் சென்றிருந்தார். அமெரிக்கத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது உலகளாவிய அமைதிக்கான அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் தூதுக்குழு பேச்சு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் அமைதி பேச்சுகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஈரான் தூதுக்குழுவினர் ஏற்கனவே சந்தித்துப் பேசியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இன்று பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஈரானிய பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்திப்புக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி […]

error: Content is protected !!