தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவும், ரஜீவர்மனின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்றது. யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும் யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகருமான ரட்ணம் தயாபரன் சிவராமின் திருவுருவப் படத்துக்கும், ரஜீவர்மனின் திருவுருவப்படத்துக்கு யாழ்.ஊடக அமையத்தின் பொருளாளரும் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான கம்சனும் மலர் மாலைகளை அணிவித்தனர். பொதுச் சுடரினை […]













