இலங்கை செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நாளை நள்ளிரவுடன் நிறைவு

  • April 23, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை, ஏப்ரல் 24 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். நாளை நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையதள அணுகல் முடக்கப்படும் என்பதுடன் எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இறுதி நேர தொழில்நுட்ப நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, பரீட்சார்த்திகள் முன்னதாகவே விண்ணப்பங்களைச் […]

உலகம் செய்தி

லெபனானில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் : இஸ்ரேலுக்கு எதிராக ஜனாதிபதி கண்டனம்

  • April 23, 2026
  • 0 Comments

லெபனானில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல்  தொடர்ச்சியாகக் குறிவைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற கொலைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு, நேற்று இஸ்ரேலிய தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ளது. அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில், இன்று காலை பெய்ரூட்டில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் பத்திரிகையாளர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் பணியாற்றிய “அல் அக்பர்” நாளிதழின் முதல் பக்கத்தில், கையில் ஒலிவாங்கியுடன் புன்னகைக்கும் […]

உலகம் செய்தி

காசாவில் இன அழிப்பு: இஸ்ரேல் தாக்குதல்களில் 72,562 பேர் பலி!

  • April 23, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் […]

உலகம் செய்தி

இந்தோ-பசுபிக் பகுதியில் அமெரிக்க கடல்சார் நடவடிக்கை தீவிரம் : தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல் இடைமறிப்பு

  • April 23, 2026
  • 0 Comments

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிய சம்பவத்திற்குப் பின்னர், இந்தியப் பெருங்கடலில் மேலும் ஒரு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி, அமெரிக்க பாதுகாப்புத் துறை சமூக ஊடகங்களில் வெளியிட்ட தகவலின்படி, “நாடற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட எம்/டி டிஃபானி” எனப்படும் கப்பல் அமெரிக்கப் படைகளால் வழிமறிக்கப்பட்டு அதில் ஏறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வலையமைப்புகளை முறியடிக்கவும், ஈரானுக்கு பொருளாதார ஆதரவு வழங்கும் தடைசெய்யப்பட்ட கப்பல்களை உலகின் எங்கிருந்தாலும் இடைமறிக்கவும், கடல்சார் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை அழிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு!

  • April 23, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதுமே இந்த உத்தரவின் பிரதான நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுவருகின்றது.

உலகம் செய்தி

ஹோர்முஸில் அமெரிக்காவின் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

  • April 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அரசியல் நிலை குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானியர்களுக்கு தங்கள் தலைவர் யார் என்பதே தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கடும்போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையில் கடும் உட்கட்சிப் போட்டி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலும் அங்கு செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த […]

உலகம் செய்தி

எமது மண்ணிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும்: லெபனான் பிரதமர் திட்டவட்டம்!

  • April 23, 2026
  • 0 Comments

லெபனான் மண்ணிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லெபனான் எல்லையில் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, அமைதி பேச்சின்போது இது தொடர்பில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் தலையீடு அவசியம் எனவும் லெபனான் பிரதமர் Nawaf Salam இடித்துரைத்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது என்பது ஒரு நீண்டகாலச் செயல்முறை என்றும், […]

இலங்கை

சமாதான பாதயாத்திரையில் பச்சிளம் குழந்தையை ஆசீர்வதித்த தேரர்: நெகிழ்ச்சிச் சம்பவம்

  • April 23, 2026
  • 0 Comments

இலங்கையில் தற்போது, உலக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச ‘அமைதிக்கான பாதயாத்திரை’ நிகழ்ச்சியின் இன்றைய பயணத்தின் போது, காண்போரை நெகிழ வைக்கும் மனிதாபிமானச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், இன்று (23) வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அலுவிஹாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை நோக்கித் தமது பாதயாத்திரை ஊர்வலத்தை ஆரம்பித்தனர். வெயிலையும் பொருட்படுத்தாது பக்திப் பெருக்குடன் மக்கள் வீதியோரங்களில் திரண்டிருக்க, பௌத்த பாராயண பாடல்களை இசைத்தபடி இந்த ஆன்மீகப் […]

உலகம் செய்தி

ஈரானிலிருந்து வந்த கப்பலை இந்திய பெருங்கடலில் வழிமறித்த அமெரிக்கா!

  • April 23, 2026
  • 0 Comments

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலொன்றை அமெரிக்கப் படைகள், இந்தியப் பெருங்கடலில் வைத்து வழிமறித்துள்ளன. மெஜஸ்டிக் எக்ஸ் என்ற பெயருடைய கப்பலில் ஏறி அமெரிக்க ராணுவத்தினர் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானுக்குத் தேவையான பொருள் உதவிகளை வழங்கும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைத் இவ்வாறு தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை மீறும் மற்றும் விரோதப் போக்குடைய கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த கடல்சார் தலையீடு அமைந்துள்ளது என அமெரிக்க […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரம் –   82.24% வாக்குப் பதிவு

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி ரீதியாக சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன. வழமைபோன்று காலையில் […]

error: Content is protected !!