இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு: நடக்கப்போவது என்ன?

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் சூழவுக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 ரூபா அதிகரித்து, 317 ரூபாவாக விற்கப்படுகின்றது. ஒக்டேன் 95 பெட்ரோல் விலை 25 ரூபா அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாவாக விற்கப்படுகிறது. ஓட்டோ டீசலின் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாவாகவும், சூப்பர் டீசல் விலை 24 ரூபா அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாவால் […]

உலகம்

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • March 10, 2026
  • 0 Comments

இத்தாலியின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் டைரேனியன் கடலில் (Tyrrhenian Sea) Richter அளவுகோலில், 6.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. 377 கிலோமீட்டர் (234 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

“ஈரானின் போர்க்கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி”

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dr. S. Jaishankar தெரிவித்தார். இந்தியாவில் இருந்து ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்து சமுத்திரத்தில் தாக்கி அழித்தது. இது விடயத்தில் இந்தியா மௌனம் காத்துவருவது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று […]

இலங்கை

இலங்கையில் ஆயுதங்களுடன் சிக்கிய படகு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இளவாலையில் போதைப்பொருளுடன் கைதான இளைஞரிடமிருந்து திருட்டு நகைகள் மீட்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து யாழுக்கு போதைப்பொருள் கடத்திய ஆணும், பெண்ணும் கைது!

  • March 10, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருட்களை கடத்திச்சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் , 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கொழும்பில் உள்ள போதைப்பொருள் […]

இலங்கை செய்தி

பள்ளி வாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞனால் யாழில் பரபரப்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது. இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது. […]

உலகம் செய்தி

போரின் முடிவு எங்கள் கையில்: ஈரான் பதிலடி!

  • March 10, 2026
  • 0 Comments

“போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம்.” என்று , ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான.  பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன. அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது.” […]

உலகம் செய்தி

போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உட்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, “ ஈரான் Iran அதுபோன்ற செயல்களில் […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரான் வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு ஆஸ்திரேலியா Australia புகலிடம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர். இதன்போது உரிய ஆவணங்களில் ஆவணங்களிடம் கைச்சாத்திடப்பட்டு, மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அடைக்காலம் வழங்காதபட்சத்தில் தமது நாடு அவர்களை பொறுப்பேற்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.