இலங்கை

ஆண்டுக்கு 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி – ஆபத்து குறித்து எச்சரிக்கும் இலங்கை அமைச்சர்

  • November 12, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தப் பிளாஸ்டிக் உற்பத்தி சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் (Water’s Edge) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முறையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

  • November 12, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம் – 20 பேர் பலி

  • November 12, 2025
  • 0 Comments

அசர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கி விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியின் C-130 ரக இராணுவச் சரக்கு விமானம் ஒன்றே இதன் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து & பகுப்பாய்வு

செவ்வாயில் மனிதர்கள் உயிர் வாழலாம்! மர்மங்கள் நிறைந்த பல தகவல்கள் கண்டுபிடிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் மறைந்துள்ள பல மர்மங்கள் நிறைந்த தகவல்களை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கண்டுபிடித்துள்ளது. அதற்கமைய, செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தில் (Jezero Crater) கண்டுபிடிக்கப்பட்ட 24 வகையான கனிமங்கள், செவ்வாய் கிரகத்தின் கடந்த கால வரலாறு குறித்த ஆச்சரியமிக்க தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன. ஒரு காலத்தில் உயிர்கள் வாழத் தகுதியான நீலக் கிரகமாக இருந்த செவ்வாய், காலப்போக்கில் 3 வெவ்வேறு  அவதாரங்களை எடுத்துள்ளமை, இந்தக் தரவுகளைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரோவர் அனுப்பிய தரவுகளை […]

உலகம்

ஆப்கானிஸ்தான் செல்வதை தவிர்க்கவும் – ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை!

  • November 12, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமகாலத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ராவெல்லர் (Smartraveller) வலைத்தளம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆலோசனையில், ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் போது பயங்கரவாதத் தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவல் போன்ற கடுமையான ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்ய நம்பகமான முகவர்களிடம் கூட முன்பதிவு செய்யக்கூடாது என்று ஸ்மார்ட்ராவெல்லர் […]

இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மருத்துவவர்கள்

  • November 12, 2025
  • 0 Comments

இலங்கையில் நவம்பர் 17ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதன் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த முடிவு இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு வரவு […]

உலகம்

150 ஆண்டுகள் வாழத் தயாராகும் சீன, ரஷ்ய தலைவர்கள்! சீனாவில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

  • November 12, 2025
  • 0 Comments

மனிதர்களின் ஆயுளை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுகளைச் சீனா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களைச் சீன அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வயதெல்லையை 150 ஆண்டுகள் வரை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வுகள் மூலம் பெற்றுள்ளதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனித ஆயுளை மாற்றும் நடவடிக்கையில் ஷென்சென்னில் உள்ள லாங்வே பயோசயின்ஸ் (Longway Bioscience) என்ற முன்னணி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மனிதர்களின் வயதை […]

உலகம்

ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை விதிக்கத் திட்டம்

  • November 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருகிறது. 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் திருநங்கைப் போட்டியாளர்கள் பங்கேற்க முழுமையாகத் தடை விதிப்பது குறித்து ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரியின் (Kirsty Coventry) தலைமையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பெண்களுக்கான மருந்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

  • November 12, 2025
  • 0 Comments

பெண்கள் பயன்படுத்தும் மருந்து தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டை மருத்துவ ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். டைலெனால் அல்லது பாராசிட்டமால் என்ற மருந்தை கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தக் கூடாத, இதனால் நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவ்வாறான எந்தவொரு பாதிப்பும் இல்லையென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் டைலெனால் மருந்தை பயன்படுத்துவது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தில் அடுத்த ஆண்டு ஏற்படவுள்ள மாற்றம்

  • November 12, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் அடுத்த வருடத்திலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு ஜெர்மன் கூட்டாட்சி அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்ச ஊதியம் மணிநேரத்திற்கு 12.82 யூரோவிலிருந்து 13.90 யூரோவாக அதிகரிக்க உள்ளது. மேலும், ஜனவரி 2027 ஆம் ஆண்டில் இது மணிநேரத்திற்கு 14.60 யூரோ உயரும். 2015 இல் குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவே மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குறைந்தபட்ச ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின் […]