செய்தி விளையாட்டு

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

  • November 11, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர்(Ron Dermer) பதவி விலகல்

  • November 11, 2025
  • 0 Comments

காசா போரின் போது பேச்சுவார்த்தைகளில் முன்னணிப் பங்காற்றியவரும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) நெருங்கிய நம்பிக்கையாளருமான இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர்(Ron Dermer) பதவி விலகியுள்ளார். “மூலோபாய விவகார அமைச்சர் பதவியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எனது முடிவை உங்களுக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன் ” என்று டெர்மர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து அந்த கடிதத்தில், 2022ம் ஆண்டு டிசம்பரில் அரசாங்கத்தில் சேர்ந்தபோது தனது குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அமைச்சராக […]

உலகம் செய்தி

மலேசியா அருகே மியான்மர் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

  • November 11, 2025
  • 0 Comments

தாய்லாந்து-மலேசியா(Thai-Malaysia) எல்லைக்கு அருகே மியான்மரிலிருந்து(Myanmar) வந்த நூற்றுக்கணக்கான குடியேறிகளின் படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களின் 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரின் ராக்கைன்(Rakhine) மாநிலத்திலிருந்து புறப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மலேசியாவின் லங்காவி(Langkawi ) தீவுக்கு வடக்கே மற்றும் தாய்லாந்தின் கோ தருடாவோ(Ko Tarutao) தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 300 பேருடன் புறப்பட்ட கப்பல் மலேசியாவை நெருங்கியதும் பயணிகள் மூன்று சிறிய […]

இந்தியா செய்தி

டெல்லி விமான நிலையத்தில் போலி வேடமணிந்து போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் கைது

  • November 11, 2025
  • 0 Comments

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(Delhi’s Indira Gandhi International Airport), தாய்லாந்திலிருந்து(Thailand) வந்த ஒரு பெண், தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரி என்று தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்டுளளார். மேலும், அவரது உடைமைகளை சோதனை செய்ததில் 11.350 கிலோகிராம் எடையுள்ள 20 ஹைட்ரோபோனிக் கஞ்சா (hydroponic weed) பொதிகள் மீட்கப்பட்டன. விசாரணையின் போது, ​​அந்தப் பெண் விமான நிலைய கழிப்பறைக்குள் சென்று, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய சின்னம் […]

உலகம் செய்தி

சிரியாவில் தேசிய அருங்காட்சியகத்தில் ஆறு பண்டைய ரோமானிய சிலைகள் கொள்ளை

  • November 11, 2025
  • 0 Comments

சிரிய தலைநகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குள் திருடர்கள் நுழைந்து, ரோமானிய(Roman) காலத்தைச் சேர்ந்த பல பழங்கால சிலைகளைத் திருடிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டமாஸ்கஸின்(Damascus) தேசிய அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்தும், கடந்த ஆண்டு 54 ஆண்டுகால அசாத் குடும்ப ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு ஜனவரி மாதம் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தில், சிரியாவின் நீண்ட வரலாற்றைச் சேர்ந்த விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் உள்ளன. ரோமானிய காலத்தைச் […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் தலிபான்கள்

  • November 11, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. “இஸ்லாமாபாத்தில் உள்ள நீதித்துறை ஆணையத்தைத் தாக்கியது எங்கள் போராளிகள். பாகிஸ்தானின் இஸ்லாமியமற்ற சட்டங்களின் கீழ் தீர்ப்புகளை நிறைவேற்றிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குறிவைக்கப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல […]

இந்தியா செய்தி

பீடி கொடுக்க மறுத்த நபரை கத்தியால் குத்திய கஞ்சா போதையில் இருந்த 16 வயது சிறுவன்

  • November 11, 2025
  • 0 Comments

கிழக்கு டெல்லியின் பாண்டவ்(Pandav) நகரில், பீடி கொடுக்க மறுத்த நபரை கத்தியால் குத்தியதாக கஞ்சா போதையில் இருந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டா(Noida) சாலையில் உள்ள புதர்களுக்கு அருகில் நாய்கள் கூட்டமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த இடத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ​​வயிறு மற்றும் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் மயக்கமடைந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா சஹானி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் லால் […]

செய்தி விளையாட்டு

இலங்கை அணிக்கு 300 ஓட்ட இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

  • November 11, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெறுகிறது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடந்த 06 மாதங்களில் 91 கைதிகள் தவறுதலாக விடுதலை!

  • November 11, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஏப்ரல் மாத தொடக்கத்திற்கும் அக்டோபர் மாத இறுதிக்கும் இடையில் மொத்தம் 91 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நீதி அமைச்சகத்தின் (MoJ) சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக மோசமான குற்றவாளிகள் பலர் தவறுதலாக விடுதலை செய்யப்படுகின்ற விடயம் நடப்பு அரசாங்கத்திற்கு அவப்பெயரை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி (David Lammy) சிறைச்சாலைகளில் இருக்கும் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். மார்ச் 2024 மற்றும் மார்ச் 2025 க்கு […]

இலங்கை

“எந்த வாகனமும் தேவையில்லை” – நாமல் ராஜபக்ச!

  • November 11, 2025
  • 0 Comments

தனக்கும் தனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாடகை வண்டிகள் தேவையில்லை என்று  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  அறிவித்துள்ளார். குறித்த மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான ஆதரவின் அடையாளமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான்கரை மணி நேர வரவு செலவு திட்ட […]