இலங்கைக்கு பங்களாதேஷ் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் கையளிப்பு
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அங்கு நடந்து வரும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் வகையில், பங்களாதேஷ் இன்று பிற்பகல் (டிசம்பர் 3) மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 ரக விமானம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி மயூரி பெரேரா (Mayuri Perera) இந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் இலங்கையில் […]













