இலங்கை

இலங்கையில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெள்ளத்தால் நாசமாகின

  • December 3, 2025
  • 0 Comments

கடந்த நட்களில் நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அவற்றில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீர்செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். எனினும், 24 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்னும் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அனைத்து எரிபொருள் நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் முழுமையாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குறிப்பிட்டார். இதேவேளை, சீரற்ற வானிலையால் ஆலயங்கள், […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடந்த தாக்குதல்களில் 6 பாகிஸ்தான் அதிகாரிகள் உயிரிழப்பு

  • December 3, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின்(Pakistan) ஆப்கானிஸ்தான்(Afghanistan) எல்லைக்கு அருகே நடந்த இரண்டு தாக்குதல்களில் ஒரு உள்ளூர் அரசாங்க அதிகாரி மற்றும் ஐந்து காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் பனியாலாவில்(Baniala) நடந்த குண்டுவெடிப்பில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக பன்னு(Bannu) நகரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளூர் நிர்வாகி ஷா வாலியைக்(Shah Wali) கொன்று அவரது காரை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் […]

இலங்கை செய்தி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடக சந்திப்பு

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) இன்றைய தினம் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகமான சௌமிய பவனில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தியுள்ளார். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் குடும்பங்களுக்கு மறைந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்(Soumiyamurthy Thondaman) அவர்களின் நினைவாக “சௌமிய தான யாத்திரா”(Sawmiya Dhana Yatra) என்ற திட்டத்தினூடாக வடக்கில் பருத்தித்துறையில்(Point Pedro) இருந்து தெற்கில் தெய்வேந்திர முனைவரை(Deivendra Point) உள்ள அனைத்து மக்களும் […]

இலங்கை

இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • December 3, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி வரையான நிலவரப்படி 479 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு 359 ஓட்டங்கள் இலக்கு

  • December 3, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில்(Raipur) நடைபெறுகிறது. நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோலி(Virat Kohli) 102 […]

செய்தி வாழ்வியல்

சமூக ஊடகப் பயன்பாடு: இளம் வயதினர் அதிகம் பாதிப்பு!

  • December 3, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்கள் (Social Media) இளம் வயதினருக்குத் தகவல் பரிமாற்றத்தையும் இணைப்பையும் வழங்கினாலும், அது அவர்களின் மன ஆரோக்கியத்தில் (Mental Health) ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து உளவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிக கவலை நிலவுகிறது. சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் புகைப்படங்கள் கணக்குகள் (Accounts), உண்மைக்குப்புறம்பான, திருத்தப்பட்ட வாழ்க்கைத் தரத்தை (Perfected Lifestyles) மட்டுமே காட்டுகின்றனர். இதைத் தங்கள் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, இளம் வயதினர் தாங்கள் தோல்வியடைந்ததாகவோ (Failure) அல்லது குறைபாடு உடையவர்களாகவோ உணர்கிறார்கள். […]

உலகம்

19 நாடுகளின் புகலிடக் கோரிக்கையை நிறுத்திய ட்ரம்ப்!

  • December 3, 2025
  • 0 Comments

பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் இருந்த 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற விண்ணப்பங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. வொஷிங்டன் (Washington), டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய  நிலுவையில் உள்ள அனைத்து புகலிடம் மற்றும் சலுகை கோரிக்கைகளிலும் ‘விரிவான மறுபரிசீலனை’ மற்றும் ‘தீர்ப்பு நிறுத்திவைப்பு’ ஆகியவற்றை கட்டாயமாக்கும் ஒரு குறிப்பாணையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ளது. இந்நடவடிக்கையானது ஆப்கானிஸ்தான், ஈரான், லிபியா, […]

இலங்கை

பேரனர்த்தம்: பாதீட்டை மாற்றியமைக்குமாறு நாமல் வலியுறுத்து!

  • December 3, 2025
  • 0 Comments

நாட்டில் பேரனர்த்தம் ஏற்பட்டதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். இது […]

இலங்கை

பேரிடர் குறித்து தவறிழைப்பு: தெரிவுக்குழு அமைக்குமாறு வலியுறுத்து!  

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேற்படி வலியுறுத்தலை விடுத்தார். “ இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, குறித்த அனர்த்தம் பற்றி அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததா? இது பற்றி வளிமண்டளவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. மௌன போக்கு […]

செய்தி வாழ்வியல்

வெள்ளப் பணிகளில் ஈடுபடுவோர் டாக்ஸிசைக்ளின் எடுக்குமாறு பரிந்துரை!

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்குப் பின், சுகாதார அதிகாரிகள் எலிக் காய்ச்சல் (Leptospirosis / Rat fever), வயிற்றுப்போக்கு (diarrhoea), சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு தோல் நோய்த்தொற்றுகள் (skin infections) ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். ஆலோசகரும் சமூக மருத்துவருமான அத்துல லியனபத்திரண (Dr. Athula Liyanapathirana) அவர்கள், அசுத்தமான தண்ணீரால் நோய்கள் எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் காய்ச்சி ஆற வைத்த அல்லது பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான […]

error: Content is protected !!