இந்தியா இலங்கை செய்தி

இலங்கை வந்தடைந்த இந்தியாவின் ஒன்பதாவது அவசர நிவாரண விமானம்

  • December 6, 2025
  • 0 Comments

இந்தியாவின் “ஆபரேஷன் சாகர் பந்து”(Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகளின் ஒன்பதாவது தொகுதி கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை(BIA) வந்தடைந்துள்ளது. மேலும், இந்தப் பொருட்களுடன் இந்திய இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த 13 பொறியாளர்களும் உதவி வழங்க வருகை தந்துள்ளனர். இலங்கை இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்தப் பொருட்களை முறையாகப் பெற விமான நிலையத்தில் ஒன்று […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

14ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆபத்து!! விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

  • December 6, 2025
  • 0 Comments

நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கும் மழை […]

உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசை பெற நோர்வே செல்லும் மரியா கொரினா மச்சாடோ

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் தலைமறைவாக வசித்து வரும் வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), தனது நோபல் பரிசைப் பெறுவதற்காக நோர்வே(Norway) தலைநகர் ஒஸ்லோவுக்குச்(Oslo) செல்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மச்சாடோவுடன் நான் பேசினேன், அவர் ஒஸ்லோவிற்கு வருகை தருவதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநரகம் மற்றும் நோர்வே நோபல் குழுவின் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென்(Kristian Berg Harpviken) குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, திகதி அல்லது பயண […]

இலங்கை செய்தி

இலங்கை: சிகப்பு எச்சரிக்கை பல பகுதிகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கையானது நாளை மாலை 4:00 மணி நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகையில் ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளார்ககள். மேலும் அந்த அறிக்கையில் ஆபத்தான பகுதிகளை மூன்று நிலைகளாக பிரித்துள்ளனர் அதில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் (DSD) பின்வருமாறு:  சிவப்பு எச்சரிக்கை – கட்டாயம் வெளியேற வேண்டிய பிரதேச […]

இலங்கை

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

  • December 6, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வெளியாகிய அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக பதிவாகியிருந்தது. எனினும் அந்த எண்ணிக்கை தற்போது 618ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 583,030 குடும்பங்களைச் […]

இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் மரணம்

  • December 6, 2025
  • 0 Comments

தெஹிவளை பகுதியில் உள்ள விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து

  • December 6, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் […]

ஐரோப்பா செய்தி

இனி இந்த நாட்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது எனப் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

  • December 6, 2025
  • 0 Comments

ஃபைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியான ஒரு கட்டுரையின்படி தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள இரண்டு நாடுகளின் பட்டபடிப்புக்கான விண்ணன்களை நிராகரிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள். ஒன்பது உயர்கல்வி நிறுவனங்கள்,, “நம்பகத்தன்மை” கொண்ட மாணவர்களை மட்டுமே சேர்ப்பதாகவும், “அதிக ஆபத்துள்ள” (high-risk) நாடுகளிலிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதை நிறுத்தியுள்ளன என்பதையும் உறுதியளித்துள்ள. பிரித்தானியாவில் சில பல்கலைக்கழகங்கள் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸ்தான் மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக தெரிவிக்கின்றன. வோல்வஹாம்டன் பல்கலைக்கழகம் (University of Wolverhampton): இந்த நாட்டில் உள்ள […]

உலகம்

ஆப்பிரிக்காவின் தலைநகரில் பாரிய துப்பாக்கி சூடு –  11 பேர் பலி!

  • December 6, 2025
  • 0 Comments

ஆப்பிரிக்காவின் தலைநகரில் இன்று இடம் பெற்ற பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. உரிமம் இன்று இயங்கி வந்த பார் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று வயது குழந்தை 12 மற்றும் 16 வயதுடைய இரண்டு  சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவத்துடன் […]

இலங்கை

அரசாங்கத்தின் 25,000 கொடுப்பனவு யாருக்கு கிடைக்கும்?

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான  வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், கட்டமைப்புச் சேதம் இல்லாவிட்டாலும் சிறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் இந்த வழிகாட்டுதலின்படி, கொடுப்பனவைப் பெறத் […]

error: Content is protected !!