மனிதாபிமான நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் விமானம்!
டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) […]













