ரஷ்யாவின் தாக்குதல் : போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!
உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான்வெளி தாக்குதல்களுக்கு மத்தியில் போலத்தில் உள்ள நேட்டோ போர் விமானங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வார்சாவில் (Warsaw) உள்ள ஆயுதப்படை செயல்பாட்டுக் கட்டளை தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை அறிவித்துள்ளது. போர் விமானங்கள் தயார்படுத்தப்பட்டு, தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் உளவு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தின் வான்வெளி […]













