இலங்கை

கொழும்பில் கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

  • July 5, 2025
  • 0 Comments

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன உள்ளிட்ட கரையோரப் பகுதிகளிலேயே இந்த நிலைமை அதிகரித்துள்ளது. இது கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகரசபையின் உறுப்பினரான சமல் சஞ்சீவ கூறியுள்ளார். அதேநேரம் குறித்த பெண்கள் கரையோரப்பகுதியில் மது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார். இது, பாரிய பொது […]

விளையாட்டு

குகேஷ் உடன் தோல்வி – செஸ் விளையாட பிடிக்கவில்லை என கார்ல்சன் விரக்தி

  • July 5, 2025
  • 0 Comments

குரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உள்ளார் இந்திய வீரரான குகேஷ். கடந்த மாதம் கிளாசிக்கல் பிரிவில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முறை நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷை பலவீனமான வீரர் என கார்ல்சன் விமர்சித்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரின் 6-வது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய வெள்ளம் – 13 பேர் மரணம் – 20க்கும் அதிகமானவர்கள் மாயம்

  • July 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கடுமையான வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிந்துள்ளதுடன் 20க்கும் அதிகமான சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். கோடை விடுமுறை முகாம்கள் நிறைந்த டெக்சஸ் ஹில் பகுதியில் சில மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை முக்கால் மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. குவாடலுப்பே ஆற்றின் நீர்மட்டம் 26 அடி உயர்ந்ததால் மோசமான வெள்ளம் ஏற்பட்டது என டெக்சஸ் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஆற்றோரத்தில் இருந்த Camp Mystic கோடை விடுமுறை முகாமில் சுமார் 700 பிள்ளைகள் இருந்தனர். […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • July 5, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், அவ்வப்போது […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் கொண்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு தயாராகும் ஜப்பான்

  • July 5, 2025
  • 0 Comments

300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் கொண்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு ஜப்பான் தயாராகி வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஜப்பானின் Nankai Troughயில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு மிகப்பெரிய பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி 298,000 பேர் வரை உயிரிழக்கவும், 3 டிரில்லியன் டொலர் சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அமைச்சரவை அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. ஜப்பானிய அரசாங்கம் தற்போது அதைச் சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இறப்புகளின் எண்ணிக்கையை சுமார் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

ஊடக செயல்பாடு குறித்து சர்வதேச மாணவர்களுக்கு ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரிக்கை

  • July 5, 2025
  • 0 Comments

சர்வதேச மாணவர்கள் தங்களது ஊடக செயல்பாடு மற்றும் பயணத் திட்டங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளைச் சேர்ந்தவர்கள் பயணத்தின்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், பாஸ்டனை தவிர்த்து, நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையங்களைப் பயன்படுத்தும்படியும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக விநியோக வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை

  • July 5, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டவர் சட்டவிரோதமாக விநியோக வேலை செய்வர்களுக்கு எச்சரிக்கை அவ்வாறு கண்காணிக்க முத்தரப்புப் பணிக்குழு அமைக்கப்படுவதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அதனைத் தெரிவித்தது. Grab Singapore, மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவை அதில் அங்கம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸோடும் அதன் துணை அமைப்புகளோடும் அவை சேர்ந்து செயல்படும். இணையத்தளச் சேவை ஊழியர் சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸும் அதன் துணை அமைப்புகளும் இணையத்தளச் சேவை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பற்றி எரியும் காட்டுத் தீ – வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிர கணக்கான மக்கள்

  • July 5, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் ஆயிர கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக்ஸோனி மற்றும் பிராண்டென்பர்க் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில், கடந்த முதலாம் திகதிி ஏற்பட்ட காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு ஆண் மற்றும் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

துருக்கி காட்டுத்தீ தொடர்பாக பத்து சந்தேக நபர்கள் கைது

  • July 4, 2025
  • 0 Comments

கடந்த வாரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக துருக்கிய அதிகாரிகள் பத்து சந்தேக நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். மேற்கு கடலோர மாகாணமான இஸ்மிரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீ வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்தன. ஜூன் 26 முதல் ஏற்பட்ட 65 தீ விபத்துகளில் சில, வனப்பகுதிக்கு அருகில் வெல்டிங் மற்றும் விவசாய இயந்திரங்களைப் […]

செய்தி விளையாட்டு

முன்னாள் ஆர்சனல் கால்பந்து வீரர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

  • July 4, 2025
  • 0 Comments

முன்னாள் ஆர்சனல் கால்பந்து வீரர் தாமஸ் பார்ட்டி மீது 6 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர். 32 வயதான பார்ட்டி மீதான குற்றச்சாட்டுகள் மூன்று பெண்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களுடன் தொடர்புடையவை, மேலும் 2021-2022 க்கு இடையில் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது என்று லண்டனின் பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “முன்வந்த பெண்களுக்கு ஆதரவளிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று பெருநகர காவல்துறையின் துப்பறியும் கண்காணிப்பாளர் ஆண்டி ஃபர்ஃபி தெரிவித்துள்ளார். “இந்த வழக்கால் பாதிக்கப்பட்ட […]