இஸ்ரேல், ஈரானில் இருந்து ஏராளமான குடிமக்கள்,தூதர்களை வெளியேற்றிய ஆஸ்திரேலியா,நியூசிலாந்து
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்ரேலிலிருந்து தனது நாட்டு மக்கள் சிலரை ஆஸ்திரேலியா வெளியேற்றியுள்ளது.ஈரானிலிருந்து தனது தூதரக ஊழியர்கள் வெளியேறிவிட்டதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. வான்வெளி மூடப்பட்டுள்ளதால் போர் மூண்டுள்ள இவ்விரு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவது சிரமமாக உள்ளது என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 1,500 ஆஸ்திரேலியர்கள் ஈரானிலிருந்து வெளியேற உதவி கோரி பதிவு செய்துள்ளனர்.இஸ்ரேலிலிருந்து வெளியேற ஏறத்தாழ 1,200 ஆஸ்திரேலியர்கள் உதவி கோரியுள்ளனர்.இத்தகவலை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் […]












