விளையாட்டு

கோலி குறித்து அனுஷ்கா சர்மா உருக்கம்

  • May 13, 2025
  • 0 Comments

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று காலை அறிவித்தார். கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா அது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் . “எல்லோரும் உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், யாரும் காணாத உங்களது போராட்டங்கள், வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன். அது என் நினைவில் உள்ளது. ஒவ்வொரு […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி – பிரதமர் மோடி எச்சரிக்கை

  • May 13, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது லட்சியம் நிறைவேறி உள்ளது. நமது […]

ஆசியா

சீனாவில் புகைபிடிக்கும் கணவரால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • May 13, 2025
  • 0 Comments

சீனாவில் 45 ஆண்டுகளாகப் புகைபிடிக்கும் கணவரால் புகைபிடிக்காத மனைவிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. மருத்துவ சோதனையின்போது மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் சீனாவில் ஹெனான் நகரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவிக்குச் சமீபத்தில் இருமல் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் நெஞ்சு வலி வந்தது. மருத்துவரை நாடியபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. புகைபிடிப்போரின் உற்றார் உறவினர்கள் அந்தப் பழக்கத்தால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர் கூறினார். புற்றுநோய் ஏற்படப் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 வெளிநாட்டவர்கள்

  • May 13, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 9 முதல் 10ஆம் திகி வரை, க்ளூனி பார்க், டன்னர்ன் க்ளோஸ் மற்றும் எங் நியோ அவென்யூவில் உள்ள வீடுகளில் நடந்த மூன்று திருட்டு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூவரும் Social visit pass என்னும் சமூக வருகை அனுமதியில் சிங்கப்பூர் வந்ததாகவும், மேலும் குற்றங்கள் நடப்பதற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் மதர்ஷிப் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்!

  • May 13, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு, வளிமண்டலவியல் […]

இலங்கை

இலங்கை பேருந்து விபத்தில் உயிர் பிழைத்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர், அமைச்சர்கள்

கொத்மலை, கெரண்டி எல்லாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை, கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். காயமடைந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்க பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேனவும் இந்த விஜயத்தில் இணைந்தார். “ஒரு உயிர் இழப்பு கூட ஒரு சோகம் – ஒவ்வொரு நபரும் ஒருவரின் குடும்ப உறுப்பினர்,” என்று பிரதமர் அமரசூரிய வருகைக்குப் பிறகு […]

உலகம்

மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த வீரராக அறிமுகமான இவர் இந்த வருடம் தனது ஓய்வை அறிவித்தார். சபு, மூன்று முறை உலக ”ஹெவிவெயிட்” சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியாவில் லொரி மீது சரக்கு வாகனம் மோதியதில் 9 பெண்கள்,4 குழந்தைகள் பலி

  • May 12, 2025
  • 0 Comments

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேருக்கும் மேலானோர் காயமடைந்தனர். சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் மேற்பட்டோர் பனார்சி என்ற கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு, திங்கட்கிழமை (மே 12) அதிகாலை 2 மணியளவில் சிறிய ரக லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனத்துடன் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் 9 பெண்கள், […]

ஐரோப்பா

உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய தன்னார்வலர் ஒருவர் பலி

  • May 12, 2025
  • 0 Comments

கிழக்கு உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் திங்கட்கிழமை தெரிவித்தன. கடந்த வாரம் இசியம் நகருக்கு அருகே கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான நிக் பார்சன்ஸ், இறந்ததாக SBS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அவர் மனிதாபிமான மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் தொண்டு நிறுவனமான Prevail Together உடன் பணிபுரிந்து வந்தார். அதே சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர், அந்த அமைப்பின் இணை நிறுவனர் கிறிஸ் காரெட் […]

உலகம்

வரிகளின் பெரும் பகுதியை 90 நாட்களுக்கு குறைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புதல்

  • May 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவும் சீனாவும் ஒன்றின் மேல் மற்றொன்று விதித்த இறக்குமதி வரிகளை இப்போதைக்குப் பெரிய அளவில் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல்களான அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன் நிதிச் சந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின. அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்கிடையே ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விதித்த வரிகளின் பெரும்பகுதியை 90 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் […]

error: Content is protected !!