அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் மத்தியில் இந்தியா- இங்கிலாந்து இடையே மீண்டும் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க இருக்கிறது.இந்தப் பேச்சுவார்த்தை இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற இருக்கிறது. இதில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் பிரட்டிஷ் வர்த்தக, தொழில் அமைச்சர் ஜோனதன் ரெனோல்ட்சும் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) வெளியிட்டது. “உலகிலேயே மூன்றாவது ஆகப் பெரிய பொருளியலாக இந்தியா கூடிய விரைவில் தடம் பதிக்க இருக்கிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது முக்கியம். […]













