சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
சில வகையான சமையல் எண்ணெய்களால் அமெரிக்க இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்து அதிகரித்து வருகிறது. இது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவிலும் இப்பிரச்சனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சூரியகாந்தி, திராட்சை உள்ளிட்ட விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை அதிகமாக உட்கொள்வது உடலில் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நோயாளிகளின் கட்டிகளில் அதிக அளவு பயோஆக்டிவ் லிப்பிடுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. […]













