இலங்கை : அதிகாரத்தை பயன்படுத்தி சடத்திற்கு எதிராக செயற்பட வேண்டாம் – அனுர பணிப்புரை!
கலால் அனுமதி வழங்குவதில் முறையான முறைமையை பின்பற்றுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திற்கு எதிராகச் செயற்படக் கூடாது எனவும், சட்டத்தை எப்போதும் அமுல்படுத்துவது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், சரியான நேரத்தில் வரி வசூல் செய்வதற்கான நடவடிக்கைகள், வற் வரி வசூலிப்பதில் உள்ள […]













