ஐரோப்பா

அரசியல் நெருக்கடியை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்கள்!

  • December 5, 2024
  • 0 Comments

அரசியல் நெருக்கடியின் பின்னணியில், ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்சேயில் போராட்டக்காரர்கள் தரமான பொது சேவையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல் பாரிஸிலும் ஆர்ப்பாட்டகாரர்கள் அணித்திரண்டுள்ளனர். பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து மைக்கேல் பார்னியர் ராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனான ஒரு மணித்தியால சந்திப்பிற்குப் பின்னர் இன்று காலை எலிசீ அரண்மனைக்கு வந்த அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய பிரதம மந்திரி நியமிக்கப்படும் வரை பார்னியரும் அவரது அரசாங்கமும் […]

ஆசியா

தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் சீனாவுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் தூதரக ரீதியில் எதிர்ப்பு

  • December 5, 2024
  • 0 Comments

தென் சீனக் கடலில் டிசம்பர் 4ஆம் திகதி நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் சீனாவுக்கு எதிராக பிலிப்பீன்சின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (டிசம்பர் 5), தூதரக ரீதியில் எதிர்ப்பைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீனாவும் பிலிப்பீன்ஸும் புதன்கிழமை (டிசம்பர் 4) ஸ்கார்புரோ ஷோலைச் சுற்றி நடந்த கடல்துறை மோதல் தொடர்பில் ஒன்று மற்றதன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அந்த இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்துவரும் தீவிர தகராற்றில் இது ஆக அண்மையானதாகும். இது இந்த ஆண்டு சீனாவுக்கு […]

இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் ‘பிஎஸ்எல்வி சி-59’ ஏவுகணை

  • December 5, 2024
  • 0 Comments

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ‘ப்ரோபா-3’ எனும் இரட்டை செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் PSLV-C59 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட்’ அமைப்பு மூலம் வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (டிசம்பர் 4) மாலை 4.08 மணிக்கு ‘பிஎஸ்எல்வி சி-59’ ஏவுகணை விண்ணில் பாய்ச்சப்படவிருந்தது. இறுதிக் கட்ட சோதனைகளில், […]

இலங்கை

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டலில் பாரிய தீ விபத்து! வெளிநாட்டவர்கள் உட்பட பலர் பாதிப்பு

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பிரிவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 41 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அதிகாரி கூறியுள்ளனர். அதிகாரியின் கூற்றுப்படி, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என காவல்துறையிர் தெரிவித்துள்ளனர். தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவை அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து […]

வட அமெரிக்கா

கலிஃபோர்னியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு; தன்னை தானே சுட்டு கொண்ட துப்பாக்கிதாரி !

  • December 5, 2024
  • 0 Comments

கலிஃபோர்னியா கல்லூரியில் இரண்டு குழந்தைகளைச் சுட்டுக் காயப்படுத்திய துப்பாக்கிக்காரன் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழதுள்ளார். காயமடைந்த இரு குழந்தைகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மனோவியல் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று ‘பட்’ கவுண்டி ஷெரிஃப் கோரி ஹோனியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயப் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் தொடர்பில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. “அவர்கள் உயிர் தப்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர்கள் குணமடைய நீண்ட […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு உயிர் ஆபத்து தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • December 5, 2024
  • 0 Comments

பிரித்தானியர்களுக்கு புயல் தாக்கம் குறித்த எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாராக்  Darragh  புயல் 80 மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாக மெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. Darragh மேற்கிலிருந்து கிழக்கே நகர்வதால், நாடு முழுவதும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 560 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ள குறித்த புயலானது நாடு முழுவதும் பரவலான மழைவீழ்ச்சியை கொண்டுவரும் என்பதுடன், மேற்கு மிட்லாண்ட்ஸில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி […]

மத்திய கிழக்கு

மேற்கு ஈரானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வியாழன் அன்று மேற்கு ஈரானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 15 பேர் காயமடைந்தனர், ஆனால் மாகாணத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை சேதப்படுத்தவில்லை என்று ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டன, மேலும் பல அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, IRNA […]

ஆஸ்திரேலியா

தாய்லாந்தில் நிர்வாணமாக நடந்து திரிந்து வீட்டிற்கு தீ வைத்த ஆஸ்திரேலிய பிரஜை : மடக்கி பிடித்த பொலிஸார்!

  • December 5, 2024
  • 0 Comments

தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் அவுஸ்திரேலிய நபர் ஒருவர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்ட்ரூ நிக்கோலஸ் க்ரோசியோ என்ற 38 வயதான நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து கார்களை அடித்து நொறுக்கி வீட்டிற்கும் தீவைத்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரின் செயலை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிய அண்டை வீட்டார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்துள்ளதுடன், கைது செய்துள்ளனர்.

பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமண பத்திரிக்கை லீக்கானது

  • December 5, 2024
  • 0 Comments

திருமண நாள் நெருங்கி வருவதால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் ‘கசிந்துள்ளது’. பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்த அழைப்பிதழில்… கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் பெற்றோரான ஜி. சுரேஷ் […]

இலங்கை

இலங்கை: மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது. மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களுக்கு நிகரான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது […]