இலங்கை

இந்தியா பயணமாகும் இலங்கை ஜனாதிபதி- பிரதமரை சந்திக்க திட்டம்!

  • December 10, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதல் அரச விஜயமாக டிசம்பர் 15 மற்றும் 17 க்கு இடையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டின் போது, ​​ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதி அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியுடன் செல்வார்கள் என கலாநிதி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை

இலங்கை – பேருந்து தரிப்பிடம் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!

  • December 10, 2024
  • 0 Comments

மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஜிரவத்தை வீதிச் சந்திக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று (10) அதிகாலை இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை […]

பொழுதுபோக்கு

சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா… உங்களால மட்டும் எப்படி?

  • December 10, 2024
  • 0 Comments

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த சீரியலில் நடித்தபோது தான் ஆல்யா மானசாவுக்கும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சீரியல் ஜோடியாக இருந்த இவர்கள் பின்னர் ரியல் ஜோடியாகினர். இந்த ஜோடிக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த […]

உலகம்

சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

  • December 10, 2024
  • 0 Comments

சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முற்படுகிறது. சிரியாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள கிளர்ச்சிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் சிரியாவுடன் அதிகாரபூர்வமற்ற அரசதந்திர உறவுகளை அமைத்துகொள்வதற்கு, துருக்கியே போன்ற வட்டாரப் பங்காளிகளுடன் கைகோக்க எண்ணுகிறது. சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல வழிகளை ஆராய்ந்திருப்பதாக அதன் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சிரியாவைக் கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவுடன் புதிய இணைப்புகளை அமைத்துக்கொள்ள […]

வட அமெரிக்கா

அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்க்கும் கனேடியர்கள்

  • December 10, 2024
  • 0 Comments

அமெரிக்காவை கனேடியர்கள் புறக்கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதை கனேடியர்கள் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. அண்மையில் அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் […]

ஆஸ்திரேலியா செய்தி

புலம்பெயர்ந்தோருக்கு அதிக PR வழங்க தயாராகும் ஆஸ்திரேலியா

  • December 10, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தால், தொழிற்கட்சி அரசாங்கத்தின் நிகர குடியேற்ற கட்டுப்பாட்டை அகற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் அறிவித்துள்ளார். இதன் மூலம், தொழிலாளர் அரசாங்கத்தின் நிகர இடம்பெயர்வை ஆண்டுக்கு 160,000 ஆகக் கட்டுப்படுத்தும் கொள்கையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மாணவர்கள் போன்ற தற்காலிக குடியேற்றத்திற்கும் நிரந்தர குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் கூட்டணிக்கு இரண்டு இலக்குகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டு வருட காலத்திற்கு வருடாந்தம் வழங்கப்படும் நிரந்தர விசாக்களின் எண்ணிக்கையை […]

இலங்கை

இலங்கையில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி

  • December 10, 2024
  • 0 Comments

இலங்கையில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்திக் கலந்துரையாடலில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வியல்

நடை பயிற்சியில் 6- 6- 6 நடைமுறை – உடலில் ஏற்படும் மாற்றம்

  • December 10, 2024
  • 0 Comments

நடை பயிற்சி மேற்கொள்வது சற்று எளிமையானது என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பலருக்கு இதற்கான நேரம் இருக்காது. இந்நிலையில், 6- 6- 6 என்ற நடைமுறை, நடை பயிற்சியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார். இது மூன்று வகைகளாக பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 60 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டுமனவும், நடை பயிற்சிக்கு முன்பும் பின்பும் வார்ம் அப் […]

இன்றைய முக்கிய செய்திகள்

சிரிய நாட்டு ஜனாதிபதியின் கார் சேகரிப்புகள் – மிரள வைக்கும் பட்டியல்

  • December 10, 2024
  • 0 Comments

சிரிய நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்கு சொந்தமானவை என நம்பப்படும் சொகுசுக் கார்களைக் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. டமாஸ்கஸ் நகரில் அசாதின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு கிடங்கில் அந்தக் கார்கள் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. காணொளியில் 40க்கும் அதிகமான சொகுசுக் கார்கள் தெரிகின்றன. சிவப்பு நிறத்தில் Ferrari F50, Lamborghini, Rolls Royce உள்ளிட்ட பல கார்கள் கிடங்கில் உள்ளதாக கூறப்படுகின்றது. கிளர்ச்சியாளர்கள் அசாதின் ஆட்சியைக் கவிழ்த்துள்ளனர். அவரும் அவரது குடும்பத்தாரும் ரஷ்யாவிற்குத் தப்பிவிட்டனர். […]

செய்தி

தென் கொரிய ஜனாதிபதிக்கு ஏற்பட்ட நிலை – வெளிநாடு செல்ல தடை

  • December 10, 2024
  • 0 Comments

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்த நாட்டு நீதித் துறை தடை விதித்துள்ளது. “ஜனாதிபதி யூன் சுக் இயோலின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் நடைபெற்றுவருவதால் அவா் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்று காவல்துறை, அரசு வழக்காடு துறை, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியவை கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் நீதித் துறை உயரதிகாரி பே […]