இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்கள் : பணியில் ஏற்பட்ட மாற்றத்தால் நேர்ந்த கதி!
இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்ற 17 இலங்கையர்களை நாடு கடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் வேலை விசாவில் இஸ்ரேலுக்கு வந்தவர்கள் அந்தப் பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று பேக்கரிகளில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாற்றுபவர்கள் உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார கூறுகிறார். இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் நாடு என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டுப் பணியாளர்கள் இஸ்ரேலில் பணிக்கு வந்த பின்னர் அவர்களது விசா வகையை வேறு விசா வகைக்கு […]













