ஆசியா

சிங்கப்பூரில் வாகன வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • July 14, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வாகன வைத்திருப்பவர்களுக்கு மற்றுமொரு நெருக்கடியாக உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் மேலும் உயரக்கூடும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மின் கார்கள், குறிப்பாகச் சீனாவிலிருந்து வரும் மின் கார்களுக்கான தேவை கூடுவதால் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தயாராகும் மின் கார்கள் சிங்கப்பூர்ச் சந்தையில் நுழைய முயன்றுவருகின்றன. இவ்வாண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட மின் வாகனங்களில் 40 சதவீதத்திற்கு அதிகமானவை சீனாவின் BYD நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இவ்வாண்டு பிற்பாதியில் சொகுசு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பு குறித்து எச்சரிக்கை

  • July 14, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளுக்கமைய, பொலிஸார் நடத்திய விசாரணையில், பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமணிந்த நபர்களால் மோசடி அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. கிடைத்த இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், போலி அழைப்புகள் மூலம் சிலரது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்பை உடனடியாக பதிவு செய்யுமாறு நியூ […]

செய்தி

இலங்கையை உலுக்கிய சம்பவம் – கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

  • July 14, 2024
  • 0 Comments

அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தாவின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்று மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்தா எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிளப் வசந்தாவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.

விளையாட்டு

விராட் கோலியை பாகிஸ்தானுக்கு அழைத்து வரும் தீவிர முயற்சியில் அப்ரிடி

  • July 14, 2024
  • 0 Comments

விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், இந்திய மக்கள் கொடுக்கும் அன்பையும் விருந்தோம்பலையும் மறந்துவிடுவார். இந்திய அணி 2025-ல் பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும்” என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய அணி […]

உலகம்

பிரேசிலில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் – காட்டிக் கொடுத்த மனைவியின் இன்ஸ்டா பதிவு

  • July 14, 2024
  • 0 Comments

பிரேசிலில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை வைத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். விமானியாக இருந்து போதைப்பொருள் கடத்தல் மன்னனாக மாறிய ரொனால்டு என்பவர், தனது இரண்டாவது மனைவி அன்ட்ரேஸா உடன் சவுதி, மாலத்தீவு, பிரான்ஸ் போன்ற நாடுகளை சொந்த விமானத்தில் சுற்றிவந்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அன்ட்ரேஸா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவந்துள்ளார். இந்த நிலையில், அதில் உள்ள லொகேஷனை வைத்து, பிரேசிலின் குவாருஜா நகரில் […]

இலங்கை

ஜனாதிபதி ரணிலை சந்திக்க தயாராகும் வைத்தியர் அர்ச்சுனா

  • July 14, 2024
  • 0 Comments

பல்வேறு சரச்சைக்கு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றையதினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலக மக்கள்தொகையில் ஏற்படவுள்ள மாற்றம் – பட்டியலில் இணையும் 50 நாடுகள்

  • July 14, 2024
  • 0 Comments

2080ஆம் ஆண்டுகளின் பாதியில் உலக மக்கள்தொகை ஆக அதிகமாகச் சுமார் 10.3 பில்லியனை எட்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் மக்கள்தொகை சரியத் தொடங்கிவிடும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் மக்கள்தொகை 10.2 பில்லியனாக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. தற்போது உலக மக்கள்தொகை 8.2 பில்லியனாகும். ஏற்கனவே சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட சுமார் 63 நாடுகளில் மக்கள்தொகை உச்சத்தைத் தொட்டுவிட்டது. அடுத்த […]

செய்தி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

  • July 14, 2024
  • 0 Comments

பென்சில்வேனியாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மேடையில் இருந்து ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றப்பட்டார். மேடையை விட்டுச் செல்லும்போது அவரது காதில் ரத்தம் வழிவதைப் படங்களில் காண முடிகிறது. எனினும் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி

அமெரிக்க ஜனாதிபதியாகும் முயற்சியில் ட்ரம்ப் – Facebook மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

  • July 14, 2024
  • 0 Comments

Lஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் Facebook, Instagram கணக்குகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு அவரின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கியபோது அவரின் கணக்குகள் முடக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டோரை அவர் சமூக ஊடகத்தில் புகழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரின் கணக்குகள் தடைசெய்யப்பட்டன. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவரின் கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் இருந்தன. அமெரிக்க மக்கள் அதிபர் வேட்பாளர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – நாமல் வெளியிட்ட அறிவிப்பு

  • July 14, 2024
  • 0 Comments

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் வேட்பாளரின் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது 4 அல்லது 6 வாரங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கு பலமாக இருப்பதாக அவர் கூறினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன் என பல்வேறு தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் […]