யாழில் போலி நாணயதாள் அச்சிடும் பொருட்களுடன் கொழும்பை சேர்ந்த நபர் கைது
கொழும்பிலிருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணத்துக்கு சென்று, போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்நபர் கைதான விடயமறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடும்பத்தினருடன் சென்ற நபர் ஒருவர் அரியாலை பகுதியில் நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று, குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை (8) இந்த நபர் திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் […]













