இலங்கையில் மயிலை கொன்று சாப்பிட்ட பிரபல யூடிபரை கைது செய்ய கோரிக்கை
மந்துரு ஓயா தேசிய பூங்காவில் வெளிநாட்டவர் ஒருவரும், பூர்வீக குடிமக்கள் ஐவரும் இணைந்து மயிலை கொன்று எரித்து தின்ற விதம் தொடர்பான காணொளி தொடர்பான விடயங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஹெனானிகல வனவிலங்கு தள பாதுகாப்பு அதிகாரி டபிள்யூ. எம்.குமாரசிறி விஜேகோன் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர் மற்றும் ஐந்து பூர்வீக குடிமக்களை கைது செய்யுமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்தார். இது தொடர்பான காணொளி யூடியூப் சேனலில் வெளியாகி 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டதாக […]













