செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இமாகுலேட் என்ற தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்த நிலையில் அந்த நேரம் பார்த்து சிறுத்தை பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

சிறுத்தை நுழைந்த தகவலறிந்த உடனே ஆசிரியர்கள் மாணவர்கள் இருக்கும் அறையை உடனடியாக பூட்டினர். இந்த சிறுத்தை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து பள்ளியில் இருந்து அனைத்து மாணவர்களும் அனைவரும் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி