இந்தியா

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நீரிழப்பு மற்றும் வயிற்றுத் தொற்று பிரச்சினைகள் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பிரியங்கா காந்தி, “பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரபிரதேசம் சென்றடைவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக இன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. உடல்நலம் தேறியவுடன் யாத்திரையில் இணைவேன்” என்று […]

ஐரோப்பா

ஜப்பான் உக்ரைன் இடையில் சுமார் 56 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

ஜப்பானும் உக்ரைனும் இன்று போருக்குப் பிந்தைய மீட்பு உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 56 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. டோக்கியோவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் புனரமைப்புக்கான ஜப்பான்-உக்ரைன் மாநாட்டின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மாநாட்டில் உரையாற்றிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, உக்ரைனில் இன்னும் சண்டை நடந்து வருவதாகவும், “நிலைமை எளிதானது அல்ல” என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் இந்த மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி டோக்கியோ ஒரு நாள் மாநாட்டை நடத்தியது. இரு தரப்பிலிருந்தும் சுமார் […]

இலங்கை

இராகலை – வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர்… எடுத்த விபரீத முடிவு!

  • February 19, 2024
  • 0 Comments

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை மேற்பார்வை தோட்டத்தில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை இராகலை பொலிஸார் இன்று (19)மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான (61) வயதுடைய பொண்னையா நாகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மிக நீண்ட நாட்களாக தனக்கு வயிற்று வலியென அவதிப்பட்டு வந்த நிலையில், தனது மூத்த மகனுடன் இன்று (19) காலை வைத்தியசாலைக்கு சென்று மருந்து பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய இவர், தனது வீட்டில் […]

பொழுதுபோக்கு

தனுஷின் ‘டி50’- ‘ராயன்’படத்தின் முதல் பார்வை வெளியானது!

  • February 19, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் முதல் பார்வை வெளியானது. இதனை ரசிகர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் தன் உருவத்திற்காக பல கேலிகளைச் சந்தித்தவர் நடிகர் தனுஷ். அதன் பிறகு தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பலதுறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இப்படி சினிமாவில் அவமானங்களைச் சந்தித்து வெற்றிப் பெற்றவருக்கு நடிகராக […]

இலங்கை

தலைமன்னார் சிறுமி படுகொலை! – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

  • February 19, 2024
  • 0 Comments

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை […]

ஐரோப்பா

24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்..அரசாங்கத்தை ஏமாற்றி 3.68 கோடி பலன் அடைந்த இத்தாலிய பெண்!

  • February 19, 2024
  • 0 Comments

இத்தாலியில், அரசு வழங்கும் மகப்பேறு நிதியுதவியை மோசடியாக பெற்று வாழ்க்கையில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்த ஒரு பெண், கடைசியில் மோசடி அம்பலமானதால் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த பார்பரா ஐயோல் ( 50), என்ற பெண், வேலை செய்த நிறுவனங்களையும், அரசையும் சுமார் 24 ஆண்டுகளாக ஏமாற்றி மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், 12 முறை கரு கலைந்ததாகவும் […]

இலங்கை

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் அகழ்வு பணி!

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்த நிலையில் திங்கட்கிழமை […]

பொழுதுபோக்கு

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்

  • February 19, 2024
  • 0 Comments

இந்தி சீரியல் மூலம் பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை ராஷ்மி தேசாய். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகையாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார். அதிலும் இவர் நடித்த ஹிந்தி சீரியல் “உட்டரன்” தமிழில் சிந்து பைரவி என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்து வெளியானது. இந்த கதைக்கும் அதில் வரும் கதாப்பாத்திரங்களுக்கும் தமிழ் மக்களும் அடிமை என்றால் மிககையாகாது. 16 வயதில் வேலை செய்யத்துவங்கிய ராஷ்மி, 20 வயதில் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். […]

ஐரோப்பா

Pragueவில் சாலையில் ஒன்றுத்திரண்ட விவசாயிகள்!

  • February 19, 2024
  • 0 Comments

Prague நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலைகளில் திரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஐரோப்பிய ஒன்றிய விவசாயக் கொள்கைகள் மற்றும் நியாயமற்ற நடைமுறைகளை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த போராட்டத்தில் செக் விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்புகள் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்  சில அமைப்பாளர்கள் சமீபத்திய ரஷ்ய சார்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால் இருப்பதாகத் தெரிந்ததைத் தொடர்ந்து பேரணியில் இருந்து விலகியுள்ளனர்.  

ஐரோப்பா

நிராயுதபாணியான எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்ட ரஷ்ய படைகள்

அவ்திவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின்னர், நிராயுதபாணியான எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டியுளளது. மாஸ்கோ தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவை சட்டவிரோத கொலைகள் மற்றும் பிற போர்க்குற்றங்கள் என்று உக்ரைன் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து உக்ரைன் விசாரணையை தொடங்கியுள்ளது.

error: Content is protected !!