அயலான் இந்த திரைப்படத்தின் காப்பியா? வெடித்தது சர்ச்சை
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள அயலான் திரைப்படம் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இதுதவிர யோகிபாபு, இஷா கோபிக்கர், பானுப்பிரியா, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். […]













