இலங்கை

இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

  • December 26, 2023
  • 0 Comments

இலங்கையில் பண்டிகை காலப்பகுதியின் போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மந்தமடைந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் முற்றாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க பொலிஸார் ஆரம்பித்துள்ள நடவடிக்கைக்கு […]

இலங்கை செய்தி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நான் எங்கும் கூறவில்லை – ரணில்

  • December 26, 2023
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஆளும் கட்சி அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் போட்டியிடப் போவதாகவோ, போட்டியிடப் போவதில்லை என்ற எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் […]

இலங்கை செய்தி

நாசா காலண்டரில் இடம்பிடித்த இலங்கைச் சிறுவனின் புகைப்படம்

  • December 26, 2023
  • 0 Comments

உலகத்தின் முன் இலங்கையின் பெயரை பிரகாசிக்கும் சிறுவர்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. நாசாவின் 2024 காலண்டரில் தனது ஓவியத்தை சேர்க்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு சிறிய கலைஞர் பற்றிய செய்தி திரப்பனை பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. அவர் பெயர் தஹம் லோசித பிரேமரத்ன. திபப்பனை மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறு பிள்ளை. ஓவியம் வரைவதில் உள்ளார்ந்த திறமை கொண்ட தஹம் , பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச […]

இலங்கை செய்தி

ஜோர்தானில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள்!! உணவின்றி பல மாதங்களாக போராட்டம்

  • December 26, 2023
  • 0 Comments

ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 350 இலங்கையர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உணவு மற்றும் பொருட்கள் இன்றி சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தும் விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்படி உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கை செய்தி

வெளிநட்டில் இருந்துகொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள்!! நாடு கடத்திவர தயாராகும் இலங்கை அரசாங்கம்

  • December 26, 2023
  • 0 Comments

நாட்டிற்கு வெளியில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் 30 பேரை கைது செய்து, நாடு கடத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்த குற்றவாளிகளில் 29 பேர் துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருப்பதாகவும், மற்றொருவர் பிரான்சில் இருப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த குற்றவாளிகளை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சிவப்பு நோட்டீஸ் பெற்றுள்ளதாகவும், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் […]

இலங்கை செய்தி

குழந்தைகள் மத்தியில் பரவும் சுவாச நோய்

  • December 26, 2023
  • 0 Comments

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். மக்கள் கூடும் இடங்களிலிருந்து சிறுவர்களை தூரத்தில் வைக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். முடிந்தவரை முகமூடியை அணியுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி பலி

  • December 26, 2023
  • 0 Comments

  இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் மூத்த ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். சிரியாவின் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் செயத் ராஸி மௌசவி என்ற தளபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் ஈரானின் புரட்சிகர காவலர் படையின் அனுபவமிக்க ராணுவ ஆலோசகர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவர் சிரியாவில் பணியாற்றிய ஈரானிய புரட்சியாளர்களின் மத்தியில் ஒரு முன்னணி ஆர்வலராக இருந்தார் மற்றும் […]

இலங்கை செய்தி

யாழ் பல்கலை மாணவி மரணம் – அறிக்கை சமர்ப்பிக்க பணிப்புரை

  • December 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் […]

இலங்கை செய்தி

மானிப்பாயில் போயா தினத்தில் பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

  • December 26, 2023
  • 0 Comments

போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றது. மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே இன்று(26) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 36 […]

ஆசியா செய்தி

நவாஸ் ஷெரீப்பின் வேட்புமனுவை ஏற்ற பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

  • December 26, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வேட்புமனுக்கள், உச்ச நீதிமன்றத்தால் ‘வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம்’ செய்யப்பட்டதை அடுத்து பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி குறித்த கேள்விகள் இருந்தபோதிலும் அவரது வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. “பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் NA-130 (லாகூரில் இருந்து தேசிய சட்டமன்றத் தொகுதி)க்கான வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” என்று திரு ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஸ் செய்தியாளர்களிடம் கூறினார். 73 வயதான திரு […]

error: Content is protected !!