கிழக்கில் மாணவர்களிடையே சிவில் விமான போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது இன்று (20) உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்து கொண்டு சிறப்பித்தார்.இவ் விழிப்புணர்வு செயலமர்வானது பாடசாலை மாணவ மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிவில் விமான போக்குவரத்து துறையில் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான செயற்திட்டமாக இத்திட்டம் […]













