யாழில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி
யாழ்ப்பாணத்தில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ். வடமராட்சி, நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது 31), கரவெட்டி, வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது 29) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். […]













