பாம்பு கடிக்கு இலக்கான இரண்டரை வயது சிறுமி! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கோமரங்கடவல -கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (13) காலை இடம் பெற்றுள்ளது. வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுமி கதறியதை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுமிக்கு அருகில் பாம்பு நிற்பதை அவதானித்ததாகவும் இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாம்பு […]













