இந்தியா

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை

2019 ஆம் ஆண்டு பாமக முன்னாள் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். PFI மற்றும் SDPI இன் 18 உறுப்பினர்கள் UAPA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர், அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை […]

இந்தியா ஐரோப்பா

புகழ்பெற்ற ஹனோவர் லாட்ஜ் மாளிகையை 1200 கோடிக்கு வாங்கிய இந்தியர்!

  • July 23, 2023
  • 0 Comments

லண்டனில் சுமார் ரூ.1200 கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகை ஒன்றை இந்தியாவை சேர்ந்த ரவி ரூயா என்ற கோடீஸ்வரர் வாங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் பிரம்மாண்ட சொகுசு வீடுகளுக்கான சந்தை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரவி ரூயா, லண்டனில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். 1827ம் ஆண்டு கட்டப்பட்டு தொடர்ந்து […]

இலங்கை

அடுத்த மாதத்தில் எரிபொருட்களுக்கான விலை குறைவடையும்?

  • July 23, 2023
  • 0 Comments

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் மொத்த எரிபொருளும்  இலங்கையை வந்தடையும் என எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த மாதம் முதல் வாரத்தில், சினோபெக்கிலிருந்து முதல் இரண்டு ஷிப்மென்ட்கள் வந்து சேரும். பிறகு, முதல் மாதத்திற்குள் CPC-யில் […]

வட அமெரிக்கா

கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுப்பு – விமானத்தில் இருக்கை அருகே சிறுநீர் கழித்த பெண் பயணி(வீடியோ)

  • July 23, 2023
  • 0 Comments

அமெரிக்க விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் பயணி பயணித்துள்ளார். விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த பெண் பயணி கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால், அப்பெண் கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. விமானத்தின் கழிவறை பூட்டப்பட்டுள்ளது. இதனால், தன்னை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கும்படி அப்பெண் பயணி விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரமாக அப்பெண் பயணி கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. […]

இலங்கை

கறுப்பு ஜுலையை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

  • July 23, 2023
  • 0 Comments

கறுப்பு ஜுலையை முன்னிட்டு சோசலிச வாலிபர் சங்கத்தினர் கொழும்பில் இன்று (23.07) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அகற்ற பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆட்ப்பாட்டகாரர்கள்,  லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விகாரமஹாதேவி பூங்காவை நோக்கி நகர முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்தே பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் மற்றும் கலகத் தடுப்பு பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்ததாக அவர் […]

இலங்கை

வறுமையில் வாடும் மக்கள்: சமுர்த்தி கொடுப்பனவுகளையும் இடை நிறுத்தும் அரசாங்கம் – மக்கள் விசனம்

திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரங்கல் சாந்தி நகரில் வறுமையில் பீடிக்கப்பட்டுள்ள மக்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். அரசாகத்தினால் தற்பொழுது சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மிகவும் வறுமை கோட்டிங் கீழ் வாழும் மக்களுடைய கொடுப்பனவுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உண்பதற்கு உணவில்லாமல் பசியுடன் காலத்தை கழித்து வரும் எம்முடைய சமுர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதை கவலை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஓலை குடிசையில் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வாழ்ந்து வரும் […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது “கறுப்பு ஜூலை”

  • July 23, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. நினைவேந்தலில் […]

இந்தியா பொழுதுபோக்கு

சூர்யாவின் பிறந்த நாளன்று பெரும் சோகம்.. இரு உயிர்களுக்கு என்ன பதில்?

  • July 23, 2023
  • 0 Comments

இன்று சூர்யாவின் 48-வது பிறந்தநாள் தினத்தை தடப்புடலாக கொண்டாட நினைத்த இரண்டு ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மோபுரிவாரிபாலன் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் நரசாராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என அவருடைய பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது பிளக்ஸ் பேனரில் இருந்த இரும்பு கம்பி அங்குள்ள மின்சார கம்பியில் மோதியதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவத்தை இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுக்கு உதவி சென்ற இன்னொருவரும் காயம் […]

ஆசியா

ஜப்பானில் ரயிலில் தாக்குதல் நடத்திய நபர் கைது!

  • July 23, 2023
  • 0 Comments

ஜப்பானில் ரயிலுக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு ரயில்வே அதிகாரி மற்றும் இரண்டு பயணிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் தாக்குதல்தாரியை  ஜப்பானிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும்,  தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத் தீயை களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்!

  • July 23, 2023
  • 0 Comments

கிரீஸின் ரோட்ஸ் உல்லாச தீவு பகுதியில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பெருமளவான தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதன்படி 266 தீயணைப்பு வீரர்களும்,  நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா நான்கு நீர் வாகனங்களுடன் 31 தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளது. அதேபோல் துருக்கி, பிரான்ஸ் மற்றும் குரேஷியா விமானங்களை அனுப்பியுள்ளன. கியோடாரி, ஜெனடி, பைலோனா, லார்மா, லார்டோ, லிண்டோஸ், கலாதோஸ், மலோனா, அஸ்க்லிபியோ, பெஃப்கோய், மஸ்சாரி மற்றும் ஹராக்கி ஆகிய பகுதிகளில் இருந்து […]

error: Content is protected !!