ஐரோப்பா

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத் தீயை களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்!

கிரீஸின் ரோட்ஸ் உல்லாச தீவு பகுதியில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பெருமளவான தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதன்படி 266 தீயணைப்பு வீரர்களும்,  நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா நான்கு நீர் வாகனங்களுடன் 31 தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளது. அதேபோல் துருக்கி, பிரான்ஸ் மற்றும் குரேஷியா விமானங்களை அனுப்பியுள்ளன.

கியோடாரி, ஜெனடி, பைலோனா, லார்மா, லார்டோ, லிண்டோஸ், கலாதோஸ், மலோனா, அஸ்க்லிபியோ, பெஃப்கோய், மஸ்சாரி மற்றும் ஹராக்கி ஆகிய பகுதிகளில் இருந்து வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்