இலங்கை

கறுப்பு ஜுலையை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜுலையை முன்னிட்டு சோசலிச வாலிபர் சங்கத்தினர் கொழும்பில் இன்று (23.07) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அகற்ற பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆட்ப்பாட்டகாரர்கள்,  லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விகாரமஹாதேவி பூங்காவை நோக்கி நகர முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்தே பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் மற்றும் கலகத் தடுப்பு பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்திருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்