மத்திய கிழக்கு

வடக்கு அல்ஜீரியாவில் தீ விபத்தில் சிக்கி 34 பேர் பலி!

  • July 25, 2023
  • 0 Comments

வடக்கு அல்ஜீரியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீவிபத்து காரணமாக சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 பேர் தீயணைப்பு வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் வழியாக கடலோரம் வரை பரவிய காற்றினால் இயக்கப்படும் தீப்பிழம்புகளால்  197 பேர் காயமடைந்ததாக வானொலி அறிக்கை கூறியது. சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, சுமார் 8,000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் பணியாற்றியதாகவும், 530 டிரக்குகள், தீயணைப்பு விமானத்தின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டிற்குள் […]

உலகம்

கழிவறையைப் பயன்படுத்திய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

  • July 25, 2023
  • 0 Comments

கழிவறைக்குச் சென்ற பெண் ஒருவர், தான் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கண்ட திகில் காட்சியைக் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். கிறிஸ்டினா பிலிப் என்ற பெண், கழிவறையைப் பயன்படுத்தியபின், தான் பயன்படுத்திய கழிவறைக்குள் 5 அடி நீள பாம்பு ஒன்று இருப்பதைக் கவனித்துள்ளார். தான் அந்த பாம்பைப் பார்த்து திகைத்துப்போய் நிற்க, கழிவறைக்குள் இருந்த அந்த பாம்போ, தன்னை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்ததாக கிறிஸ்டினா குறிப்பிட, ஆளாளுக்கு, ஏம்மா, கழிவறையைப் பயன்படுத்துவதற்கு முன் கழிவறைக்குள் பார்க்கமாட்டீர்களா என கேள்வி […]

ஆசியா

நீதிபதி வீட்டில் பணிப்பெண்ணுக்கு அநீதி; மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் 16 வயது சிறுமி

  • July 25, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 14 வயது சிறுமியை நீதிபதி வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிபதியின் மனைவியால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட அந்த சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் நீதிபதி அசிம் ஹபீஸ் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமி துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதியின் மனைவி சிறுமியை கொடுமை படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சர்கோதாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மைனர் பெண்ணை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் போலி ஆலோசனைகள் மூலம் பணக்காரரான தமிழர் – பிரித்தானிய பத்திரிகை தகவல்

  • July 25, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் போலியாக அகதி தஞ்சம் கோருவதற்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கு 10,000 பவுண்டுகள் வரை அறவிடும் தமிழர் ஒருவர் தொடர்பில் பிரித்தானிய இணையத்தளமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. டெய்லி மெயில் செய்தி சேவை நடத்திய மிகப்பெரிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் பவுண்டுகள் சொத்து சாம்ராஜ்யம், சிறப்பு இலக்கம் கொண்ட இலக்க தகடு கொண்ட BMW கார் என சொகுசு வாழ்க்கை வாழும் லிங்கஜோதி என்ற தமிழரே இந்த குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில் […]

இலங்கை

சாணக்கியன் பிள்ளையான் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்! பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் நடந்த அபிவிருத்தி மீளாய்வுகூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் இன்று பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அமளிதுமளிகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அபிவிருத்தி மீளாய்வுகூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சந்திரகாந்தனுக்கும் இடையே வாய்த்தர்க்கங்களும் கருத்து மோதல்களும் இடம்பெற்றன. சாணக்கியன் வீடியோ ஒன்றை ஒளிபரப்புமாறு கோரியபோது அவ்வாறு செய்யமுடியாது என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இதன்போது அரசாங்க அமைச்சர் ஒருவருக்கு ஒளிபரப்ப முடியும் என்றால் ஏன் எங்களது வீடியோவினை ஒளிபரப்பமுடியாது என்று சாணக்கியன் கோரிய […]

பொழுதுபோக்கு

75 கோடியை வசூல் செய்தது மாவீரன்… படக்குனு கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ளூ சட்டை மாறன்

  • July 25, 2023
  • 0 Comments

சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவில் ஒரு மாபெரும் வரவேற்பு மாவீரன் படத்திற்கு இருந்தது. மேலும் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்களும் இந்த படம் குறித்து நல்ல கருத்துக்களையே கூறினர். விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மாவீரன் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது மாவீரன் படத்தின் கலெக்ஷன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தது. அதில் மாவீரன் திரைப்படம் இதுவரை சுமார் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக […]

இலங்கை

முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

  • July 25, 2023
  • 0 Comments

முட்டை ஒன்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை  நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (25.07) நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது. இதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மிகக் குறைந்த விலையில், விற்பனை செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய நாடெங்கிலும் உள்ள சதொச நிறுவனங்களின்  மூலம் முட்டை ஒன்றை 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

‘மார்க் ஆண்டனி’ குறித்து புதிய செய்தியை வெளியிட்டார் விஷால்.. என்ன தெரியுமா?

  • July 25, 2023
  • 0 Comments

நடிகர் விஷால் தற்போது தனது அடுத்த படமான ‘மார்க் ஆண்டனி’ ரிலீசுக்கு தயாராகி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் இது காலப் பயணம் பற்றியது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் விஷால், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய சினிமா அனுபவமாக இருக்கும் என்று கூறினார். திரைப்படத்தைப் பற்றி […]

ஆசியா

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கம்?

  • July 25, 2023
  • 0 Comments

சீனவெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி இலங்கை, வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவர் பொதுவெளியில் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்தே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    

இலங்கை

இலங்கையில் ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ஜனாதிபதிக்கு சி.வி.ஆலோசனை

  • July 25, 2023
  • 0 Comments

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று(24) சந்தித்து பேசிய போது இதனை வலியுறுத்தியதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறினார். மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் […]

error: Content is protected !!