ஆசியா செய்தி

100 ஆண்டுகளுக்குப் பிறகு நீச்சல் வீரர்களுக்கு திறக்கப்படவுள்ள பாரிஸில் உள்ள சீன் நதி

  • July 25, 2023
  • 0 Comments

ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், பாரிஸ், சீன் நதியில் நீச்சல் வீரர்கள் மற்றும் டைவர்ஸை விரைவில் காணும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தூய்மைப்படுத்தலின் வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. அசுத்தமான தண்ணீரின் காரணமாக ஒரு நூற்றாண்டு காலமாக தடைசெய்யப்பட்ட நகர நீச்சல் விளையாட்டுகளின் முக்கிய மரபுகளில் ஒன்றாக €1.4bn (£1.2bn; $1.6bn) மறுஉருவாக்கம் திட்டம் உலகளவில் பாராட்டப்பட்டது. மூன்று ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் நிகழ்வுகள் டிரையத்லான், மாரத்தான் நீச்சல் மற்றும் பாரா-டிரையத்லான் மத்திய பாரிஸில் […]

இலங்கை

13வது திருத்தம்- ஏமாற்றமே தொடரப்போகின்றது? ந.ஶ்ரீகாந்தா

ஏமாற்றமே தொடரப்போகின்றது என்றால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக மறந்துவிட்டு, சாத்தியமான வேறு வழிமுறைகளை அரசியல் ரீதியாக எமது மக்கள் நாட வேண்டி இருக்கும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் மேலும் குய்ப்ப்பிடப்பட்டதாவது, ”13வது திருத்தச் சட்டத்தின் கீழான பொலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தியே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். பொலீஸ் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை வயது எல்லை 30ஆக உயர்வு

  • July 25, 2023
  • 0 Comments

ரஷ்ய சட்டமியற்றுபவர்கள், கிரெம்ளினின் உக்ரைன் தாக்குதலுக்கு ஒரு வருடத்தில் கட்டாய இராணுவ சேவைக்கான அதிகபட்ச வயது வரம்பை 30 ஆக உயர்த்துவதற்கான சட்டத்தை ஆதரித்தனர். “ஜனவரி 1, 2024 முதல், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட குடிமக்கள் இராணுவ சேவைக்கு அழைக்கப்படுவார்கள்” என்று பாராளுமன்றத்தின் கீழ் சபை இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்பில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் கூறியது. ஆட்சேர்ப்பு அலுவலகம் அவர்களின் வரைவு அறிவிப்பை அனுப்பியவுடன் கட்டாயப்படுத்துபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் சட்டம் தடை செய்கிறது. […]

இலங்கை

யாழில் அரை நிர்வாணமாக மது போதையில் அரச பணியாளர் செய்த மோசமான செயல்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் அரை நிர்வாணமாக மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல் பாதையில் கடமை நேரத்தில் மது போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் அரை நிர்வாணமாக மது போதையில் […]

இலங்கை

வடக்கு மக்களிடம் ஆளுநர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராகக் கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவித்துக் கொள்ளக்கூடாது எனவும் வரியை சரியான வழிமுறையில் செலுத்துவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்வேண்டும் என்றும் வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது வகையில் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நிகழ்வு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்றையதினம் (25)நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”நாடின் நலன்கருதியதான இந்த […]

இலங்கை

நல்லூர் கந்தனை வழிபட சென்ற இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி!

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ். மறை மாவட்ட முதல்வர் ஒருவரும் மற்றுமொரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அவர்களது அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை ; அதிபர் புதின் ஒப்புதல்

  • July 25, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் பாலின மற்றும் அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல அளித்துள்ளார். பாலினத்தை மாற்றிக்கொள்வது போன்ற மேற்கத்திய சிந்தனைகள் ரஷ்ய பாரம்பரியத்திற்கு எதிராக உள்ளதாக கருதி அதற்கு தடை விதித்து அந்நாட்டு மேலவையிலும்,கீழவையிலும் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன்,மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தைக்களை தத்தெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாம் பாலினத்தவரை மனவிரக்திக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டக்கூடும் […]

ஐரோப்பா

கிரீஸில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியது (வீடியோ)!

  • July 25, 2023
  • 0 Comments

கிரீஸில் கட்டுக்கடங்காமல் பரவி வருகின்ற காட்டுத்தீயை அணைக்க முற்பட்ட விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (25.07) எவியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறைந்தது இரண்டு பேருடன் பயணித்த பிளாட்டானிஸ்டோ அருகே விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/WarMonitors/status/1683818129594503170?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1683818129594503170%7Ctwgr%5E032a78cd05135084a8a5cffdd9e8b057dd5e7c1c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fworld-news%2Fvideo-firefighting-plane-with-two-aboard-crashes-in-greece-as-wildfires-rage-101690290899556.html

இந்தியா

கையும் களவுமாக சிக்கியவுடன் லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி!(வீடியோ)

  • July 25, 2023
  • 0 Comments

லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி ஒருவர் கையும் களவுமாக சிக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய மாநிலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் சிங் லோதி. இவர், நில வழக்கு தொடர்பாக அப்பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, வருவாய் துறை அதிகாரியான கஜேந்திர சிங் 5,000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். உடனே ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையிடம் சந்தன் சிங் லோதி புகார் அளித்துள்ளார். பின்பு, […]

இலங்கை

கடவுச்சீட்டுக்களை பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக இணையவழி முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறையானது பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைரேகைகளை முறையாகப் பதிவு செய்யாமை, சுயவிபர தகவல்களை முறையாகச் சமர்ப்பிக்கத் தவறியமை, இணையத்தளத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமை ஆகியன அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளாகும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார். இணையவழி கடவுச்சீட்டு முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட 35,000 […]

error: Content is protected !!