இலங்கை

ஊசியால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

  • July 17, 2023
  • 0 Comments

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். . கடந்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த இறப்புகள் குறித்தும் விசாரணை நடத்தும் பணியும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவம், செவிலியர் மற்றும் ஒவ்வாமை தொடர்பான விரிவான அறிவும் புரிதலும் […]

வட அமெரிக்கா

கனடாவில் குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

  • July 17, 2023
  • 0 Comments

கனடாவின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.இந்த தகவல்களின் அடிப்படையில் டொரன்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஸ்காப்ரோ டான்சிங் மற்றும் மார்னிங் சைட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் […]

இலங்கை

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

  • July 17, 2023
  • 0 Comments

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்தே குறித்த நபர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அயல் வீட்டுப் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் சுய […]

ஆசியா

வடகொரியா அச்சுறுத்தல் ; ஜப்பான் கடற்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி

  • July 17, 2023
  • 0 Comments

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஹவாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்தது. இந்தநிலையில் தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியை நடத்தியது. […]

இலங்கை

மன்னாரில் நடன துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக பிரம்மாண்ட பயிற்சிப்பட்டறை

  • July 17, 2023
  • 0 Comments

நடன துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இரண்டு நாள் நடன பயிற்சி பட்டறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்கள் மன்னார் வங்காலை டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரியில் இடம் பெற்றது. மன்னார் டான்ஸிங் டைம்மன்ஸ் பயிற்சி கல்லூரியின் ஒழுங்கமைப்பில் அதன் நிறுவனர் அர்ஜுன் லெம்பேட்,ரஞ்சித்,நிருஸி,எவரஸ்ரா ஆகிய நடன ஆசிரியர்கள் இணைந்து குறித்த நடன பயிற்சி பட்டறையை நடத்தியிருந்தனர் […]

இலங்கை

நீர்கொழும்பில் வைத்தியரை தாக்கிய விமானிக்கு பிணை!

  • July 17, 2023
  • 0 Comments

நீர்கொழும்பு மாவட்ட  வைத்தியசாலையின் மனநலப் பிரிவு வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம்  தொடர்பில், கைது செய்யப்பட்ட நபர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மிக் போர் விமானத்தின் விமானி ஒருவரே இவ்வாறு பிணையில் வெளியில் செல்ல அனுதிக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் தவறான தகவல்களை வழங்கி தனது மனைவியுடன் தகாத உறவை ஏற்படுத்த முயற்சித்ததாகவும், அதன்காரணமாகவே வைத்தியரை தாக்கியதாகவும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நபர் கூறியிருந்தார். சந்தேக நபரின் மனைவிக்கு வைத்தியர் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு […]

பொழுதுபோக்கு

அனைத்தும் முடிந்தது… இனி ஓய்வுதான்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா

  • July 17, 2023
  • 0 Comments

கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த சமந்தா தற்போது பான் இந்தியா நடிகையாக மிரட்டி வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ள அவர், 6 மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவில் உள்ளார். மயோசிடிஸ் பாதிப்பால் சிகிச்சை எடுத்துவந்த சமந்தா, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப முயற்சித்து வருகிறாராம். இந்நிலையில், கோயில் கோயிலாக சென்றுவரும் சமந்தா, தற்போது வேலூர் அருகேயுள்ள பொற்கோயிலில் வழிபட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் அதிக […]

ஆசியா

ஊழியர்கள் வேண்டும் – சீன நிறுனத்தின் விளம்பரத்தால் பாரிய சர்ச்சை

  • July 17, 2023
  • 0 Comments

சீனாவின் ஷென்ஜென் நகரைச் சேர்ந்த மின்னியல் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் வேண்டும் என செய்த விளம்பத்தால் பாரிய சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. மது அருந்தாத, புகை பிடிக்காத, இறைச்சி உண்ணாத ஊழியர்கள் வேண்டும் என விளம்பர் செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த ஒருவர் இணையம்வழி நடத்தப்பட்ட நேர்காணலின்போது கிடைத்த அனுபவத்தைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார். நிறுவனம் முன்வைத்த விநோதமான தகுதித் தேவைகள் குறித்து அவர் நேர்காணலின்போது கேள்வி எழுப்பினார். ஆரோக்கியமான […]

செய்தி

பாக்ஸ் ஆபிஸில் வசூல்மழை பொழியும் மாவீரன் ; பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியானது….

  • July 17, 2023
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் மாவீரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள மாவீரன் இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய மண்டேலா படத்தினை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கினார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்ட் ஆக நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து உள்ளார். வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். மாவீரன் படத்தில் நடிகர் […]

இலங்கை

யாழில் சிறுமி ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் மீதும் தாக்குதல்!

  • July 17, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரைணைகளை மேற்கொள்ள சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (17.07) இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். […]

error: Content is protected !!