ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் பிள்ளைகள் நாடு திரும்பினர்
தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று அவர்கள் இந்த நாட்டை வந்தடைந்துள்ளனர். பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வாறாயினும், தான் இலங்கை திரும்புவேன் என சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார். ஆனால் […]













