பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் ஏற்கனவே உயிாிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் – […]













