அமெரிக்காவில் 3 மகன்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை
அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தை சேர்ந்தவர் ஷாட் டொர்மென். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது டொர்மென் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன்களை சரமாரியாக சுட்டார். 3 மகன்களையும் (மகன்களின் வயது 3,4 மற்றும் 7) வரிசையாக நிற்க வைத்த டொர்மென் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த டொர்மெனின் மனைவி துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரையும் டொர்மென் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மகள் […]













