இலங்கை

பணவீக்கம் வீழ்ச்சியடைவதற்கு ஏற்ப வட்டி வீதங்களும் வீழ்ச்சியடையும் – நந்தலால் வீரசிங்க!

  • May 10, 2023
  • 0 Comments

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில்,  அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு கரத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர்  சந்தை […]

ஆசியா

போரினால் ஆதாயம் அடையும் எண்ணம் எங்களுக்கு இல்லை – சீனா!

  • May 10, 2023
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் ஆதாயம் அடையும் எண்ணம் தனது நாட்டிற்கு இல்லை என்றும், பெய்ஜிங் முன்மொழிந்த அமைதி திட்டம் குறித்து மேலும் விவாதங்கள் நடத்தப்படும் எனவும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். பெர்லினில்,  ஜேர்மன் பிரதிநிதியுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang, மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் சீன அரசாங்கம் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளை சுட்டிக்காட்டினார் ஐரோப்பாவிற்கான சீனாவின் சிறப்பு தூதர் விரைவில் உக்ரைனுக்கு விஜயம் செய்வார் […]

ஆப்பிரிக்கா

நைஜீரியா படகு விபத்து : 15 சிறுவர்கள் பலி!

  • May 10, 2023
  • 0 Comments

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 15  குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர்  குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், குறித்த படகு ஆற்றின் நடுவே சென்றுக்கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 சிறுமிகள், 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரம் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ள நிலையில், […]

கருத்து & பகுப்பாய்வு

பெரும்பாலான ஆண்டிடிரஸன் மருந்துகள் நாள்பட்ட வலிக்கு வேலை செய்யாது : ஆய்வில் வெளியான தகவல்!

  • May 10, 2023
  • 0 Comments

பெரும்பாலான ஆண்டிடிரஸன் மருந்துகள் நாள்பட்ட வலிக்கு வேலை செய்யாது என ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான பிரித்தானியர்களுக்கு, ஆண்டிடிரஸன் மருந்துகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில், இது குறித்து சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரான டாக்டர், ஹோலி பிர்கின்ஷா ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளார். இதில்,   ஃபைப்ரோமியால்ஜியா, நரம்பு நிலைகள் அல்லது தசைக்கூட்டு சேதம் ஆகியவற்றால் ஏற்படும் நாள்பட்ட வலியுடன் வாழும் மக்களுக்கு ஆண்டிடிரஸன் மருந்துகள்  வழங்கப்படுகின்றன. அமிட்ரிப்டைலைன் மிகவும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் அது செயல்படும் என்பதற்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மருத்துவராக பணிப்புரிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு வாய்ப்பு!

  • May 10, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வளர்ந்து வரும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், புதிய NHS திட்டங்களின் கீழ், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மருத்துவர்களாக பணிப்புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர்கள் பல்கலைக்கழகம் செல்லாமலேயே மருத்துவர்களாக பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டமானது, 10 மருத்துவர்களில் ஒருவர் பாரம்பரிய மருத்துவப் பட்டம் இல்லாமல், ஏ-நிலைகளுக்குப் பிறகு நேரடியாகப் பணியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் செவிலியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், “தீவிரமான புதிய அணுகுமுறையின்” பயிற்சி பெறுவார்கள் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல்: அதிகரிக்கும் பதற்றம்.!

  • May 10, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.அதேவேளை, ஹமாஸ் போன்று இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் பல ஆயுத குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. […]

ஐரோப்பா

அயல் வீட்டிலிருந்து வரும் சத்தத்தால் தொல்லை.. பொலிஸாரிடம் புகார் அளித்த நபர்

  • May 10, 2023
  • 0 Comments

சில நாடுகளில் மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் சத்தம் உருவாக்குவது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில், Frontenex என்னும் கிராமத்தில் வாழும் Colette Ferry (92) என்னும் பெண்மணியின் வீட்டுக் கதவை பொலிஸார் தட்டியுள்ளார்கள். கதவைத் திறந்த Coletteஇடம், அவரது வீட்டிலிருந்து வரும் சத்தம் தொந்தரவாக இருப்பதாகவும், தன்னால் தூங்க இயலவில்லை என்றும் பக்கத்து வீட்டுக்காரர் புகார் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள் பொலிஸார். விடயம் என்னவென்றால், அந்தப் பெண்மணியின் வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் அவர் அமைத்துள்ள குளத்தில் அவர் […]

இலங்கை

இலங்கையில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு!

  • May 10, 2023
  • 0 Comments

எலிக் காய்ச்சலின் தாக்கம்,  தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகஇ இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே சிறுபோகம் இடம்பெறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும்  பெரும்போகம் இடம்பெறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில்  எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பதாகத் தெரிவித்தார். எனவே குறித்த காலப்பகுதியில்  விவசாயிகளுக்கு,  இது தொடர்பில் தெளிவுபடுத்திஇ நோய் எதிர்ப்பு […]

இலங்கை

களுத்துறை மாணவி உயிரிழப்பு; சந்தேக நபரின் அதிரவைக்கும் பின்னணி!

  • May 10, 2023
  • 0 Comments

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் கடந்த 08ம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார். சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தின் சந்தேக நபர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே […]

இலங்கை

சிவில் அமைப்புக்கள் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

  • May 10, 2023
  • 0 Comments

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு வழக்குத் தொடர வேண்டும் என்றும் சுற்றுச்சூழலைக் கொலை செய்தவர்களை வெளிக் கொணர வேண்டும் எனவும் வலியுறுத்தி SYU மற்றும் சுற்றுச்சூழல் சிவில் அமைப்புகள் இன்று பாராளுமன்றத்தின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.