ஐரோப்பா

ஸ்பெயினை உலுக்கிய காட்டுத்தீ – எரிந்து நாசமாகிய காடுகள்

ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக தீ மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனால் காடுகளை சுற்றியுள்ள கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தீயணைப்பு படையினர் அந்த காட்டுக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 8 ஆயிரத்து 500 எக்டேர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்